இது புதுசு கண்ணா புதுசு! புதுப் பொழிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் பாபா - படத்தை மெருகேற்ற மீண்டும் டப்பிங் பேசிய ரஜினி

First Published | Nov 28, 2022, 1:09 PM IST

புதுப்பொழிவுடன் ரீ-ரிலீஸ் ஆக உள்ள பாபா படத்தின் சில காட்சிகளை மெருகேற்ற நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார்.

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு ரிலீசான திரைப்படம் பாபா. ரஜினிகாந்தை வைத்து அண்ணாமலை, பாட்ஷா என இரண்டு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா தான் பாபா படத்தையும் இயக்கினார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்தது மட்டுமின்றி தயாரித்து, கதை மற்றும் திரைக்கதையும் எழுதியது அவர் தான்.

இதன் காரணமாகவே பாபா படம், தான் நடித்த படங்களிலேயே தனது மனதுக்கு நெருக்கமான படம் என்று ரஜினிகாந்த் பல்வேறு பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துவந்த சமயத்தில் தான் பாபா ரிலீஸ் ஆனது. அதனால் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

இதையும் படியுங்கள்... ‘குக் வித் கோமாளி’ ரித்திகாவின் திருமண வரவேற்பில் குவிந்த விஜய் டிவி பிரபலங்கள்... பாலா மட்டும் மிஸ்ஸிங்..!

Tap to resize

ஆனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை தழுவியது. ஏ.ஆர்.ரகுமான் இசை, சுரேஷ் கிருஷ்ணா இயக்கம், மனிஷா கொய்ராலா ஹீரோயின் என மிகப்பெரிய நட்சத்திரங்கள் பணியாற்றியும் இப்படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில், இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யும் பணிகளை தற்போது முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறார் ரஜினி.

அப்படத்தை டிஜிட்டல் மயமாக்கி, அதில் உள்ள சில காட்சிகளை மெருகேற்றி புதுப்பொழிவுடன் ரிலீஸ் செய்ய உள்ளனர். இதற்காக அப்படத்தின் சில காட்சிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் டப்பிங் பேசிக் கொடுத்துள்ளார். அவர் டப்பிங் பேசியபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... காதல் கண்கட்டுதே...! கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் ஜோடியின் அழகிய திருமண புகைப்படங்கள் இதோ...

Latest Videos

click me!