
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு வாரிசு நடிகராக அறிமுகமாகி பல போராட்டங்களுக்கு பின்னர், கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக நிலைத்து நின்றவர் நடிகர் சூர்யா.
சினிமா மீது உள்ள ஆர்வத்தால்... லயோலா கல்லூரியில் சினிமா சம்பந்தமான படிப்பை படித்து முடித்த சூர்யா, பின்னர் கார்மெண்ட் பிசினஸ் மீது ஆர்வம் ஏற்பட்டதால் சில வருடம் அதில் கவனம் செலுத்தினார். அந்த சமயத்தில் 'ஆசை' படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கூட தவிர்த்த சூர்யா சில வருடங்களுக்கு பின்னர், தன்னை ஆசை படத்தில் அறிமுகம் செய்ய அணுகிய இயக்குனர் வசந்தை தொடர்பு கொண்டு திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாகவும், தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என கேட்டபோது நடிகர் விஜய் மற்றும் அஜித்தை வைத்து வசந்த் இயக்க இருந்த திரைப்படத்தில் இருந்து அஜித் விலகியதால் அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது.
அந்த வகையில், 1997 ஆம் ஆண்டு விஜய் - சூர்யா நடிப்பில் வெளியான 'நேருக்கு நேர்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று தோல்வியை தழுவினாலும், நடிகர் சூர்யாவுக்கு நல்ல அறிமுகத்தை இப்படம் பெற்று தந்தது. இதைத்தொடர்ந்து காதலை நிம்மதி, சந்திப்போமா, பெரியண்ணா, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்து, என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். இந்த படங்கள் சூர்யாவுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை.
இதை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு, மீண்டும் விஜய் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் பிரண்ட்ஸ். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற போதிலும், சூர்யா தனித்து ஹீரோவாக இப்படத்தில் நடிக்கவில்லை. விஜய் தான் முன்னிலைப்படுத்தப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
'சூர்யா 45' படத்தை இயக்கும் நயன்தாரா பட இயக்குனர்; வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு!
எனினும் தன்னுடைய விடா முயற்சியால் தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்த சூர்யாவுக்கு, இயக்குனர் பாலா இயக்கத்தில் நந்தா திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்திற்காக பல பயிற்சிகள் செய்து உடலை கட்டுமஸ்தாக மாற்றி மிரட்டி இருந்தார் சூர்யா. இப்படம் ஒரு தனி ஹீரோவாக சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது.
இந்த படத்திற்கு பின்னர் சூர்யா, தன்னுடைய கதைகளில் கூடுதல் கவனம் செலுத்த தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த காக்க காக்க, பிதாமகன், பேரழகன், ஆயுத எழுத்து, கஜினி, சில்லுனு ஒரு காதல், வாரணம் ஆயிரம், அயன், சிங்கம் சீரிஸ், என அடுத்தடுத்து பல படங்கள் ஹிட் அடித்ததால்... நடிகர் சூர்யா முன்னணி இடத்தை நோக்கி நகர்ந்தார்.
இதுவரை சுமார் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சூர்யா. இவரது 43-வது திரைப்படம் ஆக உருவாக்கிய 'கங்குவா' அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், சூர்யாவின் 44 மற்றும் 45 ஆவது திரைப்படங்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தன்னுடைய 44-ஆவது திரைப்படத்தில் நடித்து வரும் சூர்யா, இதை முடித்த பின்னர் 45 வது படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பு, தயாரிப்பு, என இரண்டிலும் தன்னுடைய மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து கலக்கி வரும் சூர்யா... சில பாடல்களையும் பாடி உள்ளார். குறிப்பாக 2014 ஆம் ஆண்டு, இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான 'அஞ்சான்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஏக் தோ தீன் சார்' என்கிற ரொமான்டிக் பாடலை, யுவன் சங்கர் ராஜா இசையில்... ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியது நடிகர் சூர்யா தான்.
இந்த பாடல்களை எல்லாம் எழுதியவர் கங்கை அமரனா! இவ்வளவு தான் தெரியாம போச்சே?
அதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில், உருவாகி இன்னும் வெளிவராமல் இருக்கும் திரைப்படமான 'பார்ட்டி' படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், கார்த்தி, கரிஷ்மா ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, பிரேம் ஜி என நான்கு பேரோடு இணைந்து இவர் பாடியுள்ள பாடல் 'சா சா சாரி'.
மேலும் 'சூரரை போற்று' திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் இடம்பெற்ற 'மாறா தீம்' பாடலை நடிகர் தான் தன்னுடைய சொந்த குரலில் பாடி இருந்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷன் படத்திலும், 'மகா தீம்' பாடலை தன்னுடைய கணீர் குரலால் பாடி பட்டையை கிளப்பி இருப்பார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.