1980களில் தமிழ் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வந்தவர் சுரேஷ். பன்னீர் புஷ்பங்கள் படத்தின் மூலம் அறிமுகமான இவருக்கு கங்கை அமரன் இயக்கிய கோழி கூவுது திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் கோலிவுட்டின் சாக்லேட் பாய் ஆக வலம் வந்த சுரேஷ், நடிகைகள் நதியா, ரேவதி ஆகியோருடன் அதிக படங்களில் நடித்தார். இதனால் அந்த சமயத்தில் ஹீரோயின்களோடு ஒப்பிட்டு அவரைப் பற்றி கிசுகிசுக்களும் வெளிவந்தன.
24
Nadhiya
குறிப்பாக நடிகை நதியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சுரேஷ், தன்னைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் பற்றியும் மனம்திறந்து பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “நதியா என்னுடைய பெஸ்ட் பிரண்ட். அவருடன் தான் அதிக படங்கள் பண்ணினேன். அவருக்கும் எனக்கும் ஒரு கிசுகிசு இருந்தது. அதற்கு காரணம் நாங்கள் இருவரும் அதிக படங்கள் மட்டுமின்றி, அவரது காதலர் பெயரும் என்னுடைய பெயரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும்.
நதியாவின் காதலர் பெயர் சிரிஷ், என்னுடைய பெயர் சுரேஷ், அவர் ஷூட்டிங்கில் இருக்கும்போதே அதிகளவில் தன் காதலருடன் போனில் பேசிக் கொண்டிருப்பார். அந்த சிரிஷையே பின்னர் திருமணமும் செய்துகொண்டார் நதியா. எனக்கும் நதியாவுக்கும் இடையே காதல் வர சான்ஸே இல்ல, ஏனெனில், நதியா எனக்கு தம்பி மாதிரி. அவ சினிமாவில் மென்மையா இருந்தாலும் என்னுடன் பழகும் போது அதட்டி தான் பேசுவார். நல்ல குணம் கொண்டவர்.
44
Actress Nadhiya
அவருக்கு வாழ்க்கையில் கிளாரிட்டி ஜாஸ்தி. இத்தனை ஆண்டுகள் தான் சினிமாவில் இருக்க வேண்டும், அதன்பின்னர் கல்யாணம் பண்ணனும், செட்டில் ஆனதற்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஒரு கிளியர் ஐடியாவோடு இருந்தார். நாங்கள் இப்பவும் ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருக்கிறோம். இப்பவும் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். எங்களது 80ஸ் வாட்ஸ் அப் குரூப்பில் ரஜினி சாரும் இருக்கிறார்” என உற்சாகம் பொங்க நடிகர் சுரேஷ் பேசிய பேட்டி வைரலாகி வருகிறது.