நடிகர் ஸ்ரீகாந்தின் மகளா இது? என அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக... வளர்ந்துள்ளது அஹானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
2002 ஆம் ஆண்டு, இயக்குனர் சசி இயக்கத்தில் வெளியான 'ரோஜா கூட்டம்' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில், அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த்.
27
முதல் படத்திலேயே, தன்னுடைய கியூட் சிரிப்பால்... ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்த ஸ்ரீகாந்த், இந்த படத்தை தொடர்ந்து... நடித்த ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்து, இவரின் திரையுலக வாழ்க்கைக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
காதல் ரசம் பொங்கும் கதைகளில் வெற்றிகண்ட ஸ்ரீகாந்துக்கு, ஆக்ஷன் படங்கள் மிகப்பெரிய ட்ரா பேக்காக அமைந்து, இவரின் திரையுலக வாழ்க்கையில் பல தோல்விப்படங்களுக்கு வித்திட்டது.
47
பூ படத்திற்கு பின்னர், பட சரியான வெற்றிப்படங்கள் அமையாமல் திண்டாடி வரும் ஸ்ரீகாந்த், சமீப காலமாக வில்லன் கதாபாத்திரத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் வெளியான மஹா மற்றும் காபி வித் காதல் ஆகிய இரண்டு படங்கங்களும் தோல்வியை தழுவியது.
67
மேலும் தன்னுடைய அடுத்தடுத்த வெற்றி படங்களை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்தி வரும் ஸ்ரீகாந்தின் ஃபேமிலி புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
காதலர் தினத்தை முன்னிட்டு, மகள் அஹானா மற்றும் மனைவி வந்தனாவுடன் ஸ்ரீகாந்த் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தில், ஸ்ரீகாந்த் மகள்... மளமளவென வளர்ந்து இளம் ஹீரோயின் போல் உள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.