விஜய் டிவி 'காற்றுக்கென்ன வேலி' சீரியல் நடிகர் தூக்கிட்டு தற்கொலை..! அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்..!

First Published | Feb 16, 2023, 2:01 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் நடித்து வந்த ஹரி என்பவர் திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

ஒவ்வொரு வாரமும் தமிழ் திரையுலகில் 4 படங்களுக்கு மிகாமல் திரையரங்குகள் மற்றும் ஓடிடித்தளத்தில் வெளியாகி வந்தாலும், ஒவ்வொரு நாளும் எதிர்பாராத திருப்புமுனையுடன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

குறிப்பாக, கடந்த சில வருடங்களாக.... சின்னத்திரை சீரியல்கள் இல்லத்தரசிகளை கடந்து இளம் ரசிகர்கள் மத்தியிலும் ரீச் ஆகியுள்ளது. அந்த வகையில் இளம் வட்ட ரசிகர்களை அதிகம் கவர்ந்த  சீரியல்களில் ஒன்று விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'காற்றுக்கென்ன வேலி' சீரியல்.

'ராஜா ராணி 2' சீரியலில் புது சந்தியாவாக களமிறங்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகை யார் தெரியுமா?

Tap to resize

படிப்புக்கு தடை போடும் தந்தையை மீறி, வெண்ணிலா எப்படி படித்து பட்டதாரியாக மாறுகிறார் என்பதை காதல், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஹரி.

இவர் நேற்று சென்னையில் உள்ள தன்னுடைய வீட்டில் திடீர் என தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சீரியல் குழுவினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் என்ன காரணத்திற்காக, இவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது தற்போது வரை தெரியாத நிலையில், போலீசார் இது குறித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இனி 'ராஜா ராணி 2' சீரியலில் நான் சந்தியா இல்லை..! ஷாக்கிங் வீடியோ வெளியிட்ட ரியா விஸ்வநாதன்!

Latest Videos

click me!