இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மூன்றாம் தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூரி, சூர்யா, இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய சூரி சூர்யாவின் அறக்கட்டளை குறித்து குறிப்பிடுகையில், ஆயிரம் கோயில் கட்டுவதை விட, அன்னச்சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என உணர்ச்சிவசமாக பேசியிருந்தார்.
இந்த கருத்திற்கு பல கண்டங்கள் எழுந்திருந்தன. ஏற்கனவே ஜோதிகா இதுபோன்ற கருத்தை தெரிவித்துவிட்டு ஆன்மிகவாதிகள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், சூரியும் இது போன்ற விவகாரத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...அனிருத் உடன் திரையரங்கு வந்த தனுஷ் ...ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டும் திருச்சிற்றம்பலம்