தமிழ் திரையுலகில் திரைக்கதையில் பிச்சு உதறி தனிப்பெருமை சேர்த்தவர் இயக்குநர் கே.பாக்யராஜ். நடிகர், முன்னணி இயக்குநர் என பல தளங்களிலும் வெற்றியாளராக வலம் வந்தவர்.
நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு தற்போது தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். பொங்கல் விருந்தாக திரைக்கு வர உள்ள மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது ஓடிடி பக்கம் திரும்பியுள்ள சாந்தனு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது 'பாவக் கதைகள்' ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களாக திரையுலகில் மிகப்பெரிய வெற்றியை எதிர்நோக்கி போராடும் சாந்தனுவிற்கு இது சிறப்பான திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூரரைப் போற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ள தங்கம் கதையில் சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ளார். அதற்காக அச்சு அசலாக அப்பா பாக்யராஜ் போலவே மாறியுள்ள சாந்தனுவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அப்பா பாக்யராஜின் அந்த கால ஸ்டைலில் சட்டை, பெல் பாட்டம் பேண்ட் அணிந்து நடித்துள்ளார். “கண்ணாடி மட்டும் போட்டிருந்தால் அப்படியே எங்க எங் பாக்யராஜ் தான் தலைவா நீ” என ரசிகர்கள் சாந்தனுவின் நியூ லுக்கை கொண்டாடி வருகின்றனர்.