தமிழ் சினிமாவில் நாகேஷ், கவுண்டமனி, செந்தில், வடிவேலு, விவேக்குக்கு அடுத்தபடியாக மக்களால் அதிகம் ரசிக்கப்பட்ட காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். சின்னத்திரையில் லொள்ளு சபா என்கிற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவரை சினிமாவில் அறிமுகப்படுத்தியது சிம்பு தான். இதையடுத்து சினிமாவில் அசுர வளர்ச்சி கண்ட சந்தானம், முன்னணி காமெடியனாகவும் உயர்ந்தார்.
இவர் கடந்த அறை எண் 305-ல் கடவுள் என்கிற திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதேபோல் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் தடம் பதித்த சந்தானம், படிப்படியாக காமெடியனாக நடிப்பதை குறைத்துக் கொண்டு தற்போது முழுநேர ஹீரோவாக நடித்து வருகிறார்.
இவர் ஹீரோவாக நடித்த தில்லுக்கு துட்டு, ஏ1, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும், சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளிவந்த பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டகால்டி, டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு, ஏஜண்ட் கண்ணாயிரம் ஆகிய திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இப்படி ஹீரோவாக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சந்தானத்தை மீண்டும் காமெடியனாக நடிக்குமாறு ரசிகர்கள் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய் - அஜித் மோதலுடன் ஆரம்பமாகவுள்ள 2023-ம் ஆண்டில் ரிலீசாக உள்ள பிரம்மாண்ட படங்கள் ஒரு பார்வை
இப்படி சினிமாவில் சறுக்கலை சந்தித்தாலும், நிஜ வாழ்க்கையில் தனது நீண்ட நாள் கனவு நனவாகி உள்ள சந்தோஷத்தில் இருக்கிறாராம் சந்தானம். சினிமா நட்சத்திரங்கள் பலருக்கும் சென்னையில் உள்ள ரிச்சான ஏரியாவான போயஸ் கார்டன் பகுதியில் வீடு வாங்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.
அந்த வகையில் அப்பகுதியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் வீடு அமைந்துள்ளது. இதுதவிர நடிகர்கள் தனுஷ், இயக்குனர் அட்லீ, நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோருக்கும் அங்கு வீடு உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது நடிகர் சந்தானமும் அங்கு ஏலத்துக்கு வந்த ஒரு வீட்டை பலகோடி கொடுத்து வாங்கி இருக்கிறாராம். இதன்மூலம் தனது நீண்ட நாள் கனவு நனவாகி விட்ட குஷியில் இருக்கிறாராம் சந்தானம்.
இதையும் படியுங்கள்... 'துணிவு' படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்கள் ஃபர்ஸ்ட் லுக்கை அடுத்தடுத்து வெளியிட்டு வரும் படக்குழு!