நடிகர் அஜித், இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம்... 'துணிவு'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. உலக அளவில் உள்ள அஜித் ரசிகர்களும், இந்த படத்தின் ரிலீஸுக்காக கார்த்திருக்கின்றனர்.
இதே நாளில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில்... ரசிகர்களை தாண்டி, தயாரிப்பாளர்களே... விஜய் தான் அஜித்தை விட பெரிய நடிகர், எனவே அவருடைய படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும் என கூறி வருவது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
மேலும் இரண்டு படக்குழுவினருமே... படத்தை புரமோட் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்யின் போஸ்டரை 'வாரிசு' படக்குழு ரயில் போன்றவற்றில் ஒட்டி விளம்பர படுத்தினால்... அஜித்தின் துணிவு படக்குழு ஒரு படி மேலே சென்று.... ஆகாயத்தில், ஸ்கை டைவிங் செய்து விளம்பரப்படுத்தியது... திரையுலகினரையே ஆச்சரியப்படுத்தியது.
இந்நிலையில் இன்று, 'துணிவு' படத்தில் இருந்து முக்கிய தகவல்கள் வெளியாகும் என, படக்குழு அறிவித்திருந்த நிலையில், இப்படத்தில் நடித்துள்ள முக்கிய நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் இதுவரை மொத்தம் 5 நடிகர்களின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளது. நடிகர் வீரா 'ராதா' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜான் கோகென் 'க்ரிஷ்' என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம், 96, சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ள பக்ஸ் 'துணிவு' படத்தில் ராஜேஷ் என்கிற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். நடிகர் பிரேம்... பிரேம் என்கிற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். நடிகர் மோஹன சுந்தரம் மைபா என்கிற கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கி வரும் சமுத்திரகனி, தயாளன் என்கிற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
பல தெலுங்கு, மற்றும் தமிழ் படங்களில் வில்லான் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜய், ராமச்சந்திரன் என்கிற போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
சி.எம்.சுந்தரம், துணிவு படத்தில்... முத்தழகன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடைய தோற்றத்தை வைத்து பார்க்கையில்... அஜித் கொள்ளையடிக்க போகும், பேங்கில் வேலை செய்பவர் என்பது இவரின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தால் தெரிகிறது. இந்த படத்தில் நடித்து வரும் பிரபலங்களின் தோற்றம் வெளியாகி வரும் நிலையில், விரைவில் அஜித்தின் பெயரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் மஞ்சு வாரியார், கண்மணி என்கிற கதாபாத்திரத்தில் துணிவு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து வரும் பிரபலங்களின் தோற்றம் வெளியாகி வரும் நிலையில், விரைவில் அஜித்தின் பெயரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.