ரோபோ சங்கர் மீதுள்ள விசுவாசம்... நன்றி கடனாக பணமாலை சூடி நெகிழவைத்த நடிகர்..!

Published : Sep 20, 2025, 10:43 AM IST

நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு நடிகர் ராமு என்பவர் பணமாலை சூட்டி இறுதி மரியாதை செலுத்தி இருந்தார். அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Actor Ramu Pay Tribute to Robo Shankar

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு ஏராளமான பிரபலங்களும், சின்னத்திரை நட்சத்திரங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தனது கணவரின் இறுதி ஊர்வலத்தில் ரோபோ சங்கரின் மனைவி நடனம் ஆடி வழியனுப்பி வைத்தது காண்போரை கண்கலங்க செய்தது. இந்த நிலையில், ரோபோ சங்கரின் உடலுக்கு நடிகர் ஒருவர் பணமாலை சூடி அஞ்சலி செலுத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

24
பணமாலை உடன் அஞ்சலி செலுத்திய நடிகர் ராமு

அந்த நடிகரின் பெயர் ராமு, இவர் ரோபோ சங்கர் தனக்கு செய்த உதவிக்கு நன்றிக்கடனாக பணமாலையுடன் வந்து அஞ்சலி செலுத்தியதாக கூறி இருக்கிறார். 500 ரூபாய் தாள்களுடன் அந்த பணமாலை செய்யப்பட்டு இருந்தது. ரோபோ சங்கர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் ராமு பேசுகையில், நான் ஆரம்பத்தில் கூலி வேலைக்கு தான் சென்றுகொண்டிருந்தேன். ரோபோ சங்கர் அண்ணன் தான் 2000ம் ஆண்டு எனக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தில் கார்டு எடுத்துக் கொடுத்தார். அப்போதிலிருந்தே அண்ணனுக்கு எனக்கும் நல்ல பழக்கம். பிரியங்கா அக்கா என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருத்தனாக தான் பார்த்துக் கொண்டார் என ராமு கூறினார்.

34
மிகப்பெரிய இழப்பு

தொடர்ந்து பேசிய அவர், அண்ணன் ரோபோ சங்கர் ரொம்ப அன்பானவர், பாசமானவர், எங்களுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் இருந்திருக்கிறார். அந்த வழியெல்லாம் இன்று அடைத்தது போல் ஆகிவிட்டது. ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. இது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. தமிழ்நாடு சோசியல் குரூப் என ஒரு குழு இருக்கிறது. அந்த குழுவில் 350 பேர் இருக்கிறோம். அந்த குழுவில் உள்ள அனைவருக்கும் ரோபோ சங்கர் அண்ணன் தான் எல்லா உதவியும் செய்வார். எங்களுக்கான நிகழ்ச்சியெல்லாம் அண்ணன் தான் நடத்திக் கொடுப்பார். இன்னைக்கு அவரே இல்லாதபோது என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை.

44
பணமாலை போட்டது ஏன்?

நடுரோட்டில் நிற்பது போல் தடுமாறி நிற்கிறோம். எங்க அக்கா பிரியங்கா, மனசு உடைஞ்சு அனாதையாக நிற்கிறார். அதைப் பார்க்கும் போது ரொம்ப வலியும், வேதனையா இருக்கு. ரோபோ சங்கர் அண்ணன் எப்பவுமே பணத்தை மக்களுக்காக கொடுத்துக்கிட்டே இருப்பார். ஏதாவது ஒன்னு செஞ்சுகிட்டே இருப்பார். என்னடா பணம், மக்களுக்காக கொடுடானு சொல்லுவார். நாளைக்கு நாம செத்தா கூட பணம் வராதுனு சொல்லுவார். அதனால் அவருக்கு நன்றிக் கடனாக இந்த பணமாலையை அணிவித்து அவருக்கு மரியாதை செலுத்தியதாக நடிகர் ராமு தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories