Tamil Comedy Actors who have Passed Away in 2025 : 2025-ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், சில எதிர்பாராத காமெடி நடிகர்களின் மரணங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் நெஞ்சங்களை உலுக்கும் விதத்தில் உள்ளது. இதுகுறித்து முழுமையாக பார்ப்போம்.
ஒரு திரைப்படத்திற்கு எப்படி, இயக்குனர், ஹீரோ, ஹீரோயின் முக்கியமோ அதே அளவுக்கு... காமெடி நடிகர்களும் முக்கியமானவர்கள். ஒரு படத்தில் காமெடி ஒர்க் அவுட் ஆகிவிட்டால், அந்த படம் சக்ஸஸ் ஆகிவிடும். எனவே தான் ஹீரோவை தேர்வு செய்வதற்கு முன்பு பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காமெடி நடிகைகளை தேர்வு செய்வார்கள்.
இப்படி பல்வேறு காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர வேடத்திலும் நடித்த 4 நடிகர்கள் 2025-ஆம் ஆண்டு இந்த மண்ணை விட்டு மறைந்துள்ளனர். அந்த 4 நடிகர்கள் யார் யார் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
46 வயதே ஆகும் நடிகர் ரோபோ ஷங்கர், ஏற்கனவே மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு 6 மாதம் படுத்த படுக்கையாக இருந்த நிலையில், பின்னர் அவரது குடும்பத்தினர் உறுதுணையோடு அதிலிருந்து மீண்டார். குடி பழக்கம் தான் தன்னுடைய இந்த நிலைக்கும், குடும்பத்தினர் கஷ்டத்திற்கும் காரணம் என அவரே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சில பேட்டிகளில் கூறி இருந்தார்.
மீண்டும் திரைப்படங்கள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ரோபோ ஷங்கர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீர் என, ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இவரை அங்கிருந்தவர்கள் அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல்சிகிச்சைக்காக பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கல்லீரலில் பிரச்சனை மற்றும் உணவுக்குழாயில் ரத்த கசிவு போன்ற பல்வேறு காரணங்களால் சிகிச்சை பலனின்றி ரோபோ ஷங்கர் உயிரிழந்தார். இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவருடைய உடலுக்கு, ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரைபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம், நடிகர் மதன் பாப் புற்றுநோய் காரணமாக தன்னுடைய 71-ஆவது வயதில் உயிரிழந்தார். மதன் பாப் நடிகராக அறிமுகமாவதற்கு முன்பு, ஒரு இசையமைப்பாளராகவும் , பாடகராகவும் அறியப்பட்டவர். ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் உட்பட பலருக்கு குருவாக இருந்தவர். இவருக்கு புற்று நோய் இருப்பது, இரண்டாவது ஸ்டேஜில் கண்டுபிடிக்கப்பட்ட போதும்... கீமோ தெரபி போன்ற கடுமையான வலி கொடுக்கக்கூடிய சிகிச்சையை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என சிகிச்சை எடுக்க மறுத்துவிட்டார். தன்னுடைய தனித்துவமான சிரிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்த மதன் பாப்பின் இழப்பும் இந்த ஆண்டு நேர்ந்தது.
56
சூப்பர்குட் சுப்ரமணி
சூப்பர்குட் பிலிம்ஸ் என்கிற மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனத்தில், பணியாற்றியதன் மூலமே இந்த பெயர் இவருக்கு வந்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் உருவான சில படங்களில் நடிக்க துவங்கி , பின்னர் காமெடி மற்றும் ஏராளமான குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 2 வருடங்களுக்கு மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்க்கு தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்த சுப்ரமணி , சிகிச்சை பலன் இன்றி கடந்த மே மாதம் உயிரிழந்தார். இவருக்கு வயது 58. இவருடைய இழப்பும் இந்த ஆண்டு திரைத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
66
பிந்து கோஷ்:
1970, மற்றும் 1980-களில் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் பிந்து கோஷ். டான்சரான இவர் பின்னர் நடிக்கவும் துவங்கினார். திருமணம் ஆகி குழந்தை பெற்ற பின்னரும் ஏராளமான தென்னிந்திய மொழி படங்களில் நடித்த இவர், தன்னுடைய இறுதி காலங்களில் பல கஷ்டங்களை சந்திக்க நேர்ந்தது. மருத்துவ சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் மற்ற நடிகர்களின் உதவியை நாடினார். இவர் கடந்த மார்ச் மாதம், தன்னுடைய 76 வயதில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.