ஜனனி vs குணசேகரன் இறுதியுத்தம்... கிளைமாக்ஸை நெருங்கிய மோதல்; ஜெயித்தது யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

Published : Sep 20, 2025, 09:52 AM IST

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் ஜனனி இடையேயான மோதல் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் யார் வென்றார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
14
Ethirneechal Thodargiradhu Today Episode

சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி ஜீவானந்தத்தை மீட்டு அழைத்து வருவதற்காக காரில் பெரியகுளம் கிளம்பி சென்ற நிலையில், அங்குள்ள ரெளடிகளை வைத்து ஜனனியை போட்டுத்தள்ள பிளான் போட்டிருக்கிறார் ஆதி குணசேகரன். அந்த ரெளடிகளிடம் இருந்து தப்பித்து செல்லும் ஜனனி, அவர்களை திசைதிருப்பிவிட்டுவிட்டு ஜீவானந்தமும், பார்கவியும் தலைமறைவாக இருக்கும் பஞ்சு மில்லுக்கு செல்ல திட்டமிடுகிறார். அவர் பிளான் போட்டதை போல் ரெளடிகளால் ஜனனியை பிடிக்கமுடியவில்லை. இதையடுத்து, ஜீவானந்தம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து வருகிறார் ஜனனி.

24
ஜீவானந்தத்தை கண்டுபிடித்த ஜனனி

அங்கு சென்றதும் ஜீவானந்தம் குண்டடிபட்டதை பார்த்து கண்ணீர்விட்டு அழுகிறார் ஜனனி. எங்க குடும்பத்துக்காக போராடும் உங்களை இந்த நிலைமையில் பார்ப்பேன் என்று நினைச்சுக் கூட பார்க்கல என ஃபீல் பண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்கிறார் ஜனனி. பின்னரும் மூவரும் அங்கிருந்து கிளம்பிச் செல்ல முடிவெடுக்கிறார்கள். ஆளுக்கு ஒரு பக்கமா நின்று ஆதி குணசேகரனுக்கு எதிரான இந்த இறுதி யுத்தத்தில் ஜெயிப்போம் என்று சபதமெடுக்கிறார் ஜனனி. பின்னர் அவர்கள் அங்கு இருப்பதை ரெளடிகள் கும்பல் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவர்கள் மூவரையும் போட்டோ எடுத்து ஆதி குணசேகரனுக்கு அனுப்பி கன்பார்ம் செய்துகொள்கிறார்கள்.

34
சுற்றிவளைத்த ரெளடிகள்

ஆதி குணசேகரன் அவர்கள் மூவரையும் போட்டுத்தள்ளுமாறு ரெளடி கும்பலுக்கு உத்தரவிடுகிறார். இதையடுத்து அவர்களை அட்டாக் செய்ய ரெளடிகள் களத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் தங்களை சுற்றி வளைத்ததை அறிந்த ஜனனி, அவர்களை சிங்கப்பெண்ணாய் எதிர்க்க தயாராகிறார். அந்த ரெளடிகளுடன் சண்டையிட கெத்தாக கிளம்புகிறார். மறுபுறம் மண்டபத்தில் நந்தினி புர்கா அணிந்து சக்தியிடம் பேசுவதை கதிர் பார்த்துவிடுகிறார். அவருக்கு இவ்வளவு நாட்களாக இருந்த டவுட் கிளியர் ஆகிவிடுகிறது. அந்தப் பெண் நந்தினி தான் என்பதை கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிடுகிறார் கதிர்.

44
இறுதியுத்தம் ஸ்டார்ட்

ஆதி குணசேகரன் அனுப்பிய ரெளடிகளுடன் சண்டையிட தயாராகும் ஜனனி, அவர்களை அடிச்சு துவம்சம் செய்துவிட்டு ஜீவானந்தத்தையும், பார்கவியையும் பத்திரமாக அழைத்து செல்வாரா? இல்லையெனில் ஆதி குணசேகரனின் ஆட்கள், அவர்கள் மூவரையும் போட்டுத்தள்ளுவார்களா? நந்தினி மாறுவேடத்தில் இருப்பதை கண்டுபிடிக்கும் கதிர் என்ன செய்யப்போகிறார்? இந்த இறுதி யுத்தம் கிளைமாக்ஸை எட்டி உள்ளதால் இதில் யார் வெல்லப்போகிறார்கள்? என்பது இன்னும் சில எபிசோடுகளில் தெரிந்துவிடும் என்பதால் இனி ஒவ்வொரு நாளும் செம ட்விஸ்ட் வெயிட்டிங்கில் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories