தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடித்த பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் நடித்து பிரபலமானவர் ராதாரவி. இவர்கள் இணைந்து நடித்த குரு சிஷ்யன், ராஜாதி ராஜா, சிவா, அண்ணாமலை, முத்து, படையப்பா, போன்ற அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாகவே அமைந்தது.
இவர்கள் இருவரின் நட்பு 'அருணாச்சலம்' பட விவகாரத்தில் தான் முடிவுக்கு வந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில்... கடந்த 1997 ஆம் ஆண்டு நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அருணாச்சலம். இந்த படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, மனோரம்மா, வடிவுக்கரசி, ஜெய்சங்கர், விச்சு விஷ்வநாத், ரகுவரன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஆங்கில நாவலான ரிவஸ்டர்ஸ் மில்லியன் என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் அருணாச்சலம் மற்றும் வேதாச்சலம் என்கிற இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
மிகப்பெரிய பணக்கார ரஜினிகாந்தான வேதாச்சலத்துக்கு பிள்ளையாகப் பிறந்த குழந்தை ரஜினிகாந்த் அருணாச்சலம் சூழ்நிலை காரணமாக ரவிச்சந்திரன் குடும்பத்தில் வந்து சேர்கிறது. குழந்தை இல்லாத அவருக்கு, ரஜினியாகாந்த் வீட்டுக்கு வந்த ராசி தான் அடுத்தடுத்து பிள்ளைகள் பிறப்பதாக எண்ணி ரஜினிகாந்த்தையே மூத்த மகனாக வளர்த்து ஆளாக்கும் ரவிச்சந்திரன், மூத்த பிள்ளைக்கு குடும்பத்தில் கொடுக்க வேண்டிய அத்தனை மரியாதைகளையும் அவருக்கே கொடுத்து வளர்கிறார்.
இதனை பல்வேறு திருப்புமுனைகளோடு நேர்த்தியாக இயக்கி அனைவரது பாராட்டுகளையும் குவித்தார் சுந்தர் சி. ஆனால் இந்த படத்தை முதலில் இயக்க இருந்தது, நடிகர் வாசு தானாம். அவர் நடிகர் ராதாரவியை வில்லனாக நடிக்க வைக்க செய்து கதை கூறியபோது, ராதாரவியும் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் திடீர் என இயக்குனரை ரஜினிகாந்த் மாற்றியுள்ளார். மேலும் வில்லன் நடிகர்களையும் முடிவு செய்து விட்ட ரஜினிகாந்த், இது குறித்து தெரிவிப்பதற்காக ராதாரவியை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துள்ளார்.
Vanitha: நடிகை மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்..! என்ன நடந்தது? மகள் வனிதா விஜயகுமார் கூறிய அதிர்ச்சி தகவல்..!
மற்றொரு படப்பிடிப்புக்காக ராதாரவி மைசூர் போவதற்கு முன்பு ரஜினிகாந்தை சந்திக்க வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது காலையிலேயே குடிப்பீர்களா என ராதாரவியிடம் கேட்டுள்ளார். பின்னர் இருவரும் சரக்கடிக்க துவங்கியுள்ளனர். இதை தொடர்ந்து அருணாச்சலம் படம் குறித்து பேசி இயக்குனரை மாற்றிவிட்டேன், ஏற்கனவே 3 வில்லன்கள் இருப்பதால் நான்காவதாக நீங்கள் நடித்தால் நன்றாக இருக்காது என கூறினார்.
இந்த தகவலை ஒரு நடிகர் கிட்டவே கூப்பிட்டு சொல்றாருன்னு யோசிச்சேன். நடிகராக இருக்கும்போது அந்த கஷ்டம் தெரியும். சினிமாவின் தலையெழுத்து என்ன தெரியுமா சார் என கேட்டேன். என்ன என அவர் கேட்க, ரஜினியை சுட்டிக்காட்டி இந்த திறமை (ராதாரவி) இந்த அதிர்ஷ்டத்தை (ரஜினி) தேடி வரவேண்டியிருக்கிறது. என பளீச் என கூறியுள்ளார். முதலில் ரஜினிக்கு நான் சொன்னது புரியவில்லை என்றாலும், பின்னர் அடேங்கப்பா... என அவர் சொல்ல, அந்த நேரத்திலேயே எனக்கு வாய்ப்பில்லை என புரிந்து விட்டதாக கூறியுள்ளார்.
Kayal Serial: 'கயல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்! யார் தெரியுமா..?