17 வயதில் அறிமுகம்
வாரிசு நடிகர்கள் சினிமாவில் சாதிப்பது அரிதான நிகழ்வாகவே உள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் வலம் வந்த நடிகர் தியாகராஜன், தனது மகன் பிரசாந்த்தை 17 வயதிலேயே ஹீரோவாக்கி அழகு பார்த்தார். வைகாசு பொறந்தாச்சு படம் மூலம் நடிகராக அறிமுகமான பிரசாந்துக்கு முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தொட்டதெல்லாம் ஹிட்
இதையடுத்து இவர் தொட்டதெல்லாம் ஹிட் ஆனது. வண்ண வண்ண பூக்கள், ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ், மணிரத்னத்தில் திருடா திருடா என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து 1990 முதல் 2005 வரை அஜித், விஜய்க்கு இணையாக முன்னணி நடிகராக ஜொலித்து வந்தார் பிரசாந்த்.
திருமணம்... விவாகரத்து
இவர் கடந்த 2005-ம் ஆண்டு கிரஹலட்சுமி என்கிற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2008-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த சமயத்தில் பிரசாந்த்தின் சினிமா கெரியரும் கடுமையான சரிவை சந்தித்தது.
தந்தை - மகன் கூட்டணியில் அந்தகன்
இதையடுத்து படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நடிகர் பிரசாந்த். அவ்வப்போது தந்தை இயக்கும் படங்களில் சமீபகாலமாக நடித்து வருகிறார். அந்த வகையில் அவர்கள் கூட்டணியில் தற்போது அந்தகன் திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.