வலிமை ரிலீஸ்
அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் கடந்த மாதம் 24-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியது. 2 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. விமர்சன ரீதியாக இப்படம் சறுக்கல்களை சந்தித்தாலும், பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது.
வசூல் சாதனை
இப்படம் வெளியான 10 நாட்களில் 200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. கொரோனா 3-வது அலைக்கு பின் வெறிச்சோடி காணப்பட்ட திரையரங்குகளுக்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக இப்படத்தின் ரிலீஸ் அமைந்தது. வலிமை திரைப்படம் தற்போது வெற்றிகரமாக 25 நாட்களைக் கடந்துள்ளது. பிற மாநிலங்களிலும் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.
ஓடிடி ரிலீஸ் எப்போது?
இந்நிலையில், வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளனர். அதாவது 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட பேனர் மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.