Arabic Kuthu song :3 வருஷமா டாப்பில் இருந்த ரவுடிபேபி.. ஒரே மாதத்தில் தட்டித்தூக்கி சாதனை படைத்த அரபிக் குத்து

Ganesh A   | Asianet News
Published : Mar 20, 2022, 03:48 PM IST

Arabic Kuthu song :  இந்திய அளவில் வெளியான லிரிக்கல் வீடியோக்களில் 50 லட்சம் லைக்குகளை பெற்ற முதல் பாடல் என்கிற சாதனையையும் படைத்துள்ளது அரபிக் குத்து பாடல். 

PREV
14
Arabic Kuthu song :3 வருஷமா டாப்பில் இருந்த ரவுடிபேபி.. ஒரே மாதத்தில் தட்டித்தூக்கி சாதனை படைத்த அரபிக் குத்து

அரபிக் குத்து பாடல்

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை கடந்த மாதம் காதலர் தினத்தன்று வெளியானது. நெல்சன் இயக்கிய இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். குறிப்பாக அரபிக்குத்து பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளை எழுதி இருந்தார். இப்பாடலை ஜோனிடா காந்தியுடன் இணைந்து அனிருத் பாடி இருந்தார்.

24

வைரல் ஹிட்

வெளியானது முதலே சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது இப்பாடல். இதில் விஜய் ஆடும் நடன அசைவுகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது. இதனால் அதனை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்டவர்கள் ஏராளம். ரசிகர்கள் மட்டுமின்றி முன்னணி நடிகர், நடிகைகளும் இந்த பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட இப்பாடல் மேலும் வைரல் ஹிட் ஆனது.

34

புதிய சாதனை

யூடியூப்பில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்பாடல் பல்வேறு சாதனைகளையும் படைத்து வருகிறது. அந்த வகையில் தற்போது 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ள இப்பாடல் அதன்மூலம் அதிவேகமாக 200 மில்லியனை கடந்த பாடல் என்கிற புதிய சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன் தனுஷின் ரவுடி பேபி பாடல் 48 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளை எட்டியதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் 33 நாட்களில் 200 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.  

44

அடுத்தது ஜாலியோ ஜிம்கானா

இதுதவிர இந்திய அளவில் வெளியான லிரிக்கல் வீடியோக்களில் 50 லட்சம் லைக்குகளை பெற்ற முதல் பாடல் என்கிற சாதனையையும் படைத்துள்ளது அரபிக் குத்து பாடல். பீஸ்ட் படத்தில் இருந்து நேற்று வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இப்பாடலும் பல்வேறு சாதனைகளை படைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... காளைகளுடன் மல்லுக்கட்ட தயாரான சூர்யா.... பூஜையுடன் தொடங்கியது வெற்றிமாறனின் வாடிவாசல் - வைரலாகும் போட்டோஸ்

Read more Photos on
click me!

Recommended Stories