ஜாலியோ ஜிம்கானா பாடல்
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ‘ஜாலியோ ஜிம்கானா’ என்கிற பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்திருந்த இப்பாடலை நடிகர் விஜய் பாடி இருந்தார். கு.கார்த்திக் இப்பாடல் வரிகளை எழுதி இருந்தார். நேற்று மாலை வெளியான இப்பாடலின் லிரிக்கல் வீடியோ யூடியூப்பில் செம்ம வைரல் ஆனது. இப்பாடல் வெளியான 15 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வைகளை பெற்றது.
இரவின் நிழல் பர்ஸ்ட் லுக்
அதே வேளையில் நேற்று பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இப்படம் சிங்கிள் ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
பார்த்திபன் டுவிட்டால் வெடித்த சர்ச்சை
இந்நிலையில், பீஸ்ட் படத்தில் இடம்பெறும் ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு கிடைத்த பார்வைகள் போலியானவை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக பார்த்திபன் போட்டுள்ள டுவிட் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நேற்று மணி சார் (thanks) வெளியிட்ட பர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது - முழுவதும் organic! முடிந்தவரை நானும் retweet’s செய்தேன். இயன்றவரை பரப்புங்கள். இதுவரை காணாத ஆனால் இதயம் வரை அதிர்வுகள் ஏற்படுத்தக்கூடிய படமாக இருக்கும் பலரும் பகிர்ந்து ஊக்கப் படுத்துங்கள் நண்பர்களே” என அவர் பதிவிட்டுள்ளார்.