நடிகர் பிரகாஷ் ராஜ் குடும்பத்துடன், ஃபாம் ஹவுசில் குடும்பத்தினர், மனைவி, மற்றும் மகனுடன் ஜாலியாக பொழுதை கழிக்கும் புகைப்படங்களை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
வில்லத்தனத்தை கூட மிகவும் காமெடியாகவும், எதார்த்தமாகவும் நடித்து ஹீரோ விட... நடிப்பில் அதிகம் ஸ்கோர் செய்பவர் பிரகாஷ்ராஜ். பெங்களூருவை சேர்ந்த இவரை, 'டூயட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகம் செய்து வைத்த பெருமை, இயக்குனர் சிகரம் பாலச்சந்தர்யே சேரும்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், போன்ற பல்வேறு மொழிகளில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து வரும் பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அரசியல் குறித்தும் காரஞ்சாரமான கருத்துக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகிறார்.
இவர் பிரபல நடிகை லலிதா குமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டு, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு பிரபல பாடகி போனி வர்மாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
லலிதா குமாரி மூலம் பிரகாஷ் ராஜிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், போனி வர்மாவை திருமணம் செய்த பின்னர் மகன் ஒருவரும் பிறந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம்... மனைவி, மகள், மகனுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள பிரகாஷ் ராஜ்... தற்போது பேமிலி டைம் என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குளிக்காலத்தில் மதிய நேரத்தில்... இது போல் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது மிகவும் ஆனந்தமானது என தெரிவித்துள்ளார். இந்த புகைப்படத்தில், பிரகாஷ் ராஜின் மகள்களும் உள்ளனர். அதே போல் மனைவி போனி வர்மா, தன்னுடைய மகன்... என மிகவும் கொண்டாட்டமாக இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.