காதலரின் பிறந்தநாளில்... வித்தியாசமாக காதலை அறிவித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்..! விரைவில் திருமணமா?

First Published | Dec 26, 2022, 1:57 PM IST

கடந்த ஒரு வருடமாக, காதல் கிசுகிசுவில் சிக்கி வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தன்னுடைய காதலரின் பிறந்த நாளை முன்னிட்டு, வித்யாசமாக காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங், கடந்த ஒரு வருடமாகவே பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்த பிரீத் சிங் தற்போது வெளிப்படையாக தன்னுடைய காதலை அறிவித்துள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீ சிங் கடந்த ஆண்டு தன்னுடைய 31 வது பிறந்த நாளின் போது, பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானி ரகுல் கையைப் பிடித்துக் கொண்டு, நடப்பது போல் ஒரு புகைப்படத்தை  வெளியிட்டு,  'நீங்கள் இல்லாமல் நாட்கள் நாட்கள் போல் தெரியவில்லை, நீங்கள் இல்லாமல் மிகவும் ருசியான உணவை சாப்பிடுவது வேடிக்கையாக இல்லை, உலகத்தை அர்த்தப்படுத்தும் மிக அழகான ஆன்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என பதிவு ஒன்றை போட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். 

இரட்டை குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு... கியூட்டாக கிறிஸ்துமஸை கொண்டாடிய விக்கி - நயன் ஜோடி

Tap to resize

இவரின் இந்த பதிவுக்கு பதிலளித்த ரகுல் ப்ரீத் சிங், அதே புகைப்படத்தை பகிர்ந்து, ஜாக்கி பக்னானிக்கு  நன்றி கூறியது மட்டுமின்றி, இந்த ஆண்டு நீங்கள் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு என்றும், என் வாழ்க்கையில் வண்ணம் செய்ததற்கு நன்றி... என்னை இடைவிடாமல் சிரிக்க வைத்ததற்கு நன்றி...  நீ நீயாக இருப்பதற்கு நன்றி என பதில் கொடுத்திருந்தார்.

இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலர் இவர்கள் இருவரும் டேட் செய்து வருவதாக கூறி வந்தனர். ஆனால் காதல் விவகாரம் குறித்து இதுவே உடைத்து பேசாமல் இருந்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது வெளிப்படையாக ஜாக்கி பக்னானி பிறந்தநாளை முன்னிட்டு வித்தியாசமாக காதலை வெளிப்படுத்தியுள்ளார். டிசம்பர் 25  ஜாக்கி பக்னானி  தன்னுடைய 38 வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், வித்தியாசமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

காங்கிரஸ் மூலம் அரசியல் எண்ட்ரியா? - உண்மையை பளீச் என போட்டுடைத்த திரிஷா

'என் வாழ்க்கைக்கு சாண்டா கொடுத்த மிகப்பெரிய பரிசு இவர்தான் என தனது காதலர் ஜாக்கி பக்னானியை அறிமுகப்படுத்தியுள்ளார். ஜாக்கி பக்னானி பல படங்களை தயாரித்துள்ளது மட்டுமின்றி சில பாலிவுட் படங்களில் நடித்தும் உள்ளார். 
 

மேலும் இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது எனவும், எனவே தான் காதலை ரகுல் ப்ரீத் சிங் வெளிப்படுத்தியுள்ளார் என கூறப்படுகிறது. இதையடுத்து, ரகுல் ப்ரீத் சிங் - ஜாக்கி பக்னானி ஜோடிக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

நயன்தாரா குறித்து ஆபாசமாக கமெண்ட் போட்ட நெட்டிசன்கள்... செருப்படி பதில் கொடுத்த சின்மயி
 

கன்னட திரையுலகில் வெளியான 'கில்லி'  படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்த இவர், தமிழில் 'தடையற தாக்கு' படத்தில் மூலம் அறிமுகமானார்... சுமார் பத்து வருடங்களாக திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அயலான் படத்திலும், கமல்ஹாசன் நடித்து வரும், 'இந்தியன் 2' படத்தில்... முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!