நயன்தாரா புரமோஷன் செஞ்சும் வேலைக்கு ஆகல... கனெக்ட் படத்தின் 4 நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவ்வளவுதானா..!

First Published | Dec 26, 2022, 2:41 PM IST

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படத்தின் 4 நாள் வசூல் நிலவரம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 22-ந் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தை மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நயன்தாரா உடன் சத்யராஜ், வினய் ராய், பாலிவுட் நடிகர் அனுபம் கேர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

அதுமட்டுமின்றி இப்படத்தை நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை தயாரித்து உள்ளார். வழக்கமாக படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மறுக்கும் நயன்தாரா தனது கணவர் நடித்த படம் என்பதால் கனெக்ட் படத்திற்கு மட்டும் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் புரமோஷன் செய்தார்.

இதையும் படியுங்கள்... காதலரின் பிறந்தநாளில்... வித்தியாசமாக காதலை அறிவித்த நடிகை ரகுல் ப்ரீத் சிங்..! விரைவில் திருமணமா?

Tap to resize

இவ்வாறு நயன்தாரா தீயாய் வேலை செய்வதை பார்த்தால் படம் வேறலெவலில் இருக்கும்போல என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. டெக்னிக்கல் ரீதியாக படம் புதுவிதமான அனுபவத்தைக்கொடுத்தாலும், படத்தின் திரைக்கதை சொதப்பலாக இருந்ததால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

இதனால் கனெக்ட் படத்தின் வசூலும் பயங்கரமாக அடிவாங்கி உள்ளது. இப்படம் முதல் வார இறுதியில் அதாவது முதல் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.5.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். அதில் தமிழகத்தில் மட்டும் ரூ.4.2 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த வாரம் நிறைய படங்கள் ரிலீஸ் ஆவதால் கனெக்ட் படத்தின் வசூல் 10 கோடியை எட்டுவதே சந்தேகம் தான் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... உருவத்திற்கும் நடிப்பிற்கும் எந்த சமந்தமும் இல்லை: அப்போ நாகேஷ், இப்போ யோகி பாபு!

Latest Videos

click me!