முதல் முறையாக குட்டி மகளை தூக்கிக்கொண்டு.. மனைவியுடன் திருப்பதிக்கு வந்த பிரபு தேவா! வைரலாகும் புகைப்படம்!

First Published | Jul 21, 2023, 10:56 PM IST

நடன இயக்குனரும், நடிகருமான பிரபு தேவா முதல் முறையாக தன்னுடைய மனைவி மற்றும் செல்ல மகளுடன் திருப்பதிக்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
 

தமிழ் சினிமாவில் ஒரு சாதாரண டான்ஸராக அடியெடுத்து வைத்து, கோலிவுட் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களாலும், டான்ஸார்களாலும் கொண்டாடப்படும் அளவிற்கு, தன்னுடைய தனித்துவமான நடனத்தால் ரசிகர்கள் மனதில் தனக்கென  தனி இடம்பிடித்தவர் பிரபு தேவா. நடனம் மட்டும் இன்றி, நடிப்பு, இயக்கம், தயாரிப்பு போன்றவற்றிலும் இவர் கிள்ளி தான்.
 

இவர் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி ரமலதாவை விவாகரத்து செய்து விட்டு, நயன்தாராவை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், நயன் - பிரபு காதல் தோல்வியில் முடிந்தது. பின்னர் கோலிவுட் திரையுலகில் இருந்து சில காலம் விலகி, பாலிவுட் பக்கம் சென்ற இவர்... அங்கு அக்ஷய் குமாரை வைத்து இயக்கிய ரவுடி ரத்தோர் திரைப்படம் தாறுமாறு ஹிட் அடித்தது.

தனுஷ் முதல்... லோகேஷ் கனகராஜ் வரை அணிந்திருக்கும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா? வெற்றியின் சீக்ரெட்!
 

Tap to resize

அடுத்தடுத்த பட பணிகளுக்காக பிரபு தேவா மும்பையில் வசித்து வந்த போது.. கொரோனா காரணமாக லாக் டவுன் போடப்பட்டது. அப்போது திடீர் என ஏற்பட்ட முதுகு வலிக்காக... அருகில் இருந்த மருத்துவமனைக்கு பிரபு தேவா சென்ற போது, பிசியோதெரபிஸ்ட் மருத்துவரான ஹிமானி சிங் என்பவருடன் ஏற்பட்ட பழக்கம், பின்னர் காதலா மாறி 2020 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.
 

மிகவும் எளிமையான முறையில் இவர்களின் திருமணம் நடந்த நிலையில்... பல மாதங்கள் கழித்து தான் இந்த தகவல் வெளியே வந்தது. மேலும் சமீபத்தில், ஹிமானி சிங் - பிரபு தேவா ஜோடிக்கு, அழகிய பெண் குழந்தை பிறந்த தகவல் வெளியானது. பிரபு தேவா  தற்போது முதல் முறையாக, தன்னுடைய குழந்தை மற்றும்  வந்து இன்று  திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வரலாற்றில் இதுவே முதல் முறை! சீசன் 4 டைட்டில் வின்னர் யார்? உறுதியான தகவல்!

இதுகுறித்த சில விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. விஐபி தரிசனத்தில் பிரபுதேவா சுவாமி தரிசனம் செய்த நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகள் தீர்த்த பிரசாதங்கள் கொடுத்தனர். இந்த முறை குழந்தையோடு வந்தந்தால், மிகவும் வேகமாக கோவிலில் இருந்து இந்த ஜோடி புறப்பட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!