நடிகர் ஹரிஸ் கல்யாண் பேசுகையில், கோவை வந்தது சந்தோஷம் எனவும் இயக்குநர் வர முடியவில்லை படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது. இவனா, நதியா அம்மா (அம்மா என்று நதியா கூறியதற்கு உடனே..... அக்கா என்று அழைத்தார்). தோனி அவர்கள் ஒவ்வொரிடமும் படத்தை பார்த்துவிட்டு தனியாக பேசியதாகவும், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற வில்லை எனவும் கூறினார்.
இதற்கான எதிர்பை எப்படி பார்க்கிறிர்கள் என்ற கேள்விக்கு - படத்திற்கு தேவைப்பட்டால், காட்சிக்கு தேவைப்பட்டால் தான் அது போன்ற காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக பேசவில்லை என்றார். மேலும் தோனியின் முதல் மூவியில் நடித்திருப்பது மகிழ்ச்சி என்றார். அனைத்து தரப்பு மக்களும் பார்க்ககூடிய ஒரு படமாக வந்துள்ளது.