சமீப காலமாக தமிழ் சினிமாவில், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும்.. தனுஷ், லோகேஷ் கனகராஜ், சூரி, போன்ற பல பிரபலங்கள் இந்த, கருங்காலி மாலையை அணிந்து வருகிறார்கள். இந்த மாலை அணிந்த பின்னர், அவர்கள் வாழ்க்கையில் நடந்த மாற்றங்களும், அடுத்தடுத்து அவர்களுக்கு கிடைத்த வெற்றிகளும்... கண்ணுக்கு எதிராகவே நாம் பார்த்து வருகிறோம்.
இந்த மரத்தால் செய்யப்படும், மாலையை நாம் அணிவதால்... அந்த மாலை நம் உடலில் பட்டு, மரத்தில் உள்ள பாசிட்டிவ் எனெர்ஜியை நமக்குள்ளும் ஊடுருவ செய்து, நம்மை பாசிட்டிவான நபர்களாக மாற்றுகிறது. சமீப காலமாக இந்த கருங்காலி மாலையை ஆன்மீக வாதிகள் பலர் அணிவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அதே போல் மிகவும் கோபமாக நடந்து கொள்ளும் நபர்கள் மற்றும் நெகடிவ் எண்ணங்களால் அவதி படுபவர்களுக்கு இந்த மாலையை அணிய கூறி அறிவுறுத்தி வருகிறார்கள்.
இந்த மாலையை அணிவது பில்லி சூனியம் போன்ற... எதிர்மறை விஷயங்களை முறியடிக்கும் தன்மை கொண்டதாம். அதே போல், இந்த மாலையை இந்து மதத்தை சேர்ந்தவர்கள் தான் அணிய வேண்டும் என்பது இல்லை. இது இயற்கையாக ஒரு மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாலை என்பதால்... சாதி - மத தடை இன்றி, யார் வேண்டுமானாலும் அணியலாம். கருங்காலி மாலை அணிய நினைப்பவர்கள், அதை வாங்கி வந்து பாலில் சில மணிநேரம் ஊறவைத்து விட்டு அணிவது மிகவும் சிறப்பு.