69வது தேசிய விருது இன்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் ரசிகர்கள் பலர் தேசிய விருது கிடைக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, ஜெய்பீம், கர்ணன், போன்ற படங்களுக்கு ஒரு விருது கூட கிடைக்காதது மிகப்பெரிய ஏமாற்றம் என்றாலும், கடைசி விவசாயி படத்திற்கு இரண்டு தேசிய விருதும், இரவின் நிழல் படத்திற்கு ஒரு தேசிய விருதும் கிடைத்தது சற்று ஆறுதல் என்றே கூறலாம்.
"வணக்கம் நான் பார்த்திபன் மகிழ்வுடன், நிலவில் சந்திரயான் இறங்கும் போது விஞ்ஞானிகள் மட்டும் அல்ல, அந்த கட்டிடத்தில் பணிபுரியும் அனைவருமே, மகிழ்ந்திருப்பார்கள். பெருமை பட்டிருப்பார்கள். அப்படி பெருமைக்குரிய தேசிய விருது, 'இரவின் நிழல்' படத்தில் ஸ்ரேயா கோஷல் பாடிய மாயாவா தூயவா என்கிற பாடலுக்கு அறிவிக்கப்பட்ட போது, இதற்க்கு முழு முதல் காரணமான ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றி.
அதில் என்னுடைய படத்தின் பெயர் இருப்பது மகிழ்ச்சி. அதில் என் பெயர் இருப்பதும் மகிழ்ச்சி. இதற்க்கு காரணமான ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும், ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கும் இப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய மனப்பூர்வமான நன்றி என தெரிவித்துள்ளார்.