தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல் ஹாசனுக்கு அடுத்து நடிப்பிற்காக எதையும் செய்ய துணிபவர் நடிகர் நாசர். எந்த ஒரு கேரக்டரைக் கொடுத்தாலும் அதற்கு தனது நடிப்பால் உயிர் கொடுக்கும் வித்தைக்காரர்.
தமிழ் சினிமாவின் பல ஜாம்பவான்களைப் போலவே நாசரும் இயக்குநர் கே.பாலச்சந்தரின் கண்டுபிடிப்பு தான். தனது கல்யாண அகதிகள் என்ற படம் மூலமாக நாசரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.
ஒல்லியான தேகம், ஒடிசலான முகத்துடன் குடிகார கணவனாக நடித்த நாசர் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞராக மாறுவார் என யாரும் அப்போது எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
அதன்பின்னர் இயக்குநர் மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தேவர் மகன், குருதிப்புனல், பம்பாய் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவிற்கு தனித்துவமான வில்லன் நடிகரை அடையாளம் காட்டியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என இந்திய மொழிகளில் மொத்தம் எட்டு மொழிகளை சரளமாக பேசக்கூடிய திறமை வாய்ந்த நடிகரான நாசர் இந்தியாவில் பல மொழிகளில் நடித்து இன்றுவரை தனித்துவமான சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இன்று வரை அனைத்து விதமான கேரக்டர்களையும் கலந்து கட்டி துவம்சம் செய்து வந்த நாசர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அனைவரையும் திணறடித்துள்ளார்.
சும்மா ஹாலிவுட் நடிகர்கள் ரேஞ்சுக்கு கோட்டு, சூட்டுடன் ஜம்முனு போஸ் கொடுக்கும் நாசரின் புகைப்படங்கள் இதோ...
கோட் சூட்டில் மாஸ் காட்டும் நாசர்
நீங்க கமலின் தசாவாதரம் பார்த்திருப்பீங்க நாசர் கலக்கம் அவதாரம் பார்த்திருக்கீங்களா?
நடிப்பில் மட்டுமல்ல போஸ் கொடுத்து மாஸ் காட்டுவதில் நாசரை மிஞ்ச ஆள் இல்லை போல?
மகனுக்கு போட்டியா விட்டா இவரே ஹீரோவாக நடிப்பார் போலயே?