“சூர்யாவை செருப்பால் அடித்தால் ரூ.1 லட்சம் பரிசு”... இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் சர்ச்சை பேச்சு...!

First Published Sep 18, 2020, 3:40 PM IST

மேலும் நடிகர் சூர்யாவை யாராவது செருப்பால் அடித்தால் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூறியதாகவும் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. 

கடந்த 13ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அதற்கு முதல் நாள் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
undefined
இதையடுத்து நீட் தேர்வை கடுமையாக விமர்சித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ட் தேர்வை மிக கடுமையாக விமர்சித்தார். நீட் என்பது மனுநீதித் தேர்வு என்றும் கிராமப் புற மாணவர்களின் மருத்துவ கனவை நாசமாக்குகிறது எனவும் சாடியிருந்தார். நீதிமன்றம் நீட் தேர்வை அனுமதித்திருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தார் சூர்யா.
undefined
சூர்யா வெளியிட்ட அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. நீதிமன்ற அவமதித்த சூர்யா மீது நடவடிக்கை தேவை எனசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சுப்பிரமணியம் கடிதம் அனுப்பியிருந்தார்.
undefined
இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தேவை இல்லை என இன்று முடிவு செய்திருக்கிறது.
undefined
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இந்து மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாலர் தர்மா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் என்ற பெயரில் இடதுசாரிகளுடன் கூட்டணி வைத்துள்ளதாகவும், நீட் விவகாரத்தில் சூர்யா நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாகவும் குற்றச்சாட்டியுள்ளார்.
undefined
மேலும் நடிகர் சூர்யாவை யாராவது செருப்பால் அடித்தால் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூறியதாகவும் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இந்து மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகியான தர்மா, பிரபல நடிகர் குறித்து இப்படி பேசியிருப்பது சோசியல் மீடியாவில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
undefined
click me!