Mayilsamy : கடைசி வரை நிறைவேறாமல் போன மயில்சாமியின் ஆசை... இதை பார்க்காமலே இறந்துட்டாரே..!

First Published | Feb 19, 2023, 12:43 PM IST

நேற்று சிவராத்திரி பூஜையின் போது டிரம்ஸ் சிவமணி அருகே அமர்ந்திருந்த மயில்சாமி, அப்போது அவரிடம் தனது நீண்ட நாள் ஆசை என்ன என்பதையும் கூறி இருக்கிறார்.

நடிகர் மயில்சாமி சிவராத்திரியை முன்னிட்டு சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு நேற்று இரவு சென்றுள்ளார். அங்கு பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞரான சிவமணியின் கச்சேரியும் அங்கு நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்த அந்த கோவிலில் அதிகாலை 3 மணிவரை சிவராத்திரி பூஜை நடைபெற்றுள்ளது. 

இதையடுத்து அதிகாலை 3.30 மணிக்கு வீட்டுக்கு சென்றுள்ள மயில்சாமி அங்கு அதிகாலை குடும்பத்தினருடன் சேர்ந்து இட்லி சாப்பிட்டு உள்ளார். சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து பதறிப்போன அவரது குடும்பத்தினர், உடனடியாக மயில்சாமியை அருகில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மயில்சாமியின் இந்த திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... சிவராத்திரி பூஜையில் பங்கேற்பு - மயில்சாமி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி வீடியோ

Tap to resize

இந்நிலையில், நேற்று சிவராத்திரி பூஜையின் போது டிரம்ஸ் சிவமணி அருகே அமர்ந்திருந்த மயில்சாமி, அப்போது அவரிடம் தனது நீண்ட நாள் ஆசை என்ன என்பதை சொல்லி இருக்கிறார். அது என்னவென்றால், இந்த மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு விவேக்கை கூட்டிட்டு வந்திருக்கேன். இப்போ உங்களையும் கூட்டிட்டு வந்துட்டேன். எப்படியாவது ரஜினிகாந்தையும் அழைத்து வந்து, அவர் கையால் அங்குள்ள சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வைக்கணும்னு மயில்சாமி சொன்னாராம்.

இந்த தகவலை டிரம்ஸ் சிவமணி தற்போது வெளியிட்டுள்ளார். மயில்சாமியின் இந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போய் உள்ளது. மயில்சாமி மறைந்துவிட்டாலும், அவருக்காக ரஜினிகாந்த் இந்த கோவிலுக்கு வந்து அவரது ஆசையை நிறைவேற்றினால் மயில்சாமியின் ஆத்மா சாந்தி அடையும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். மயில்சாமியின் இந்த ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அன்பான மனைவி... சினிமாவில் ஹீரோவாக வலம்வரும் மகன்கள் - யாரும் பார்த்திராத நடிகர் மயில்சாமியின் பேமிலி போட்டோஸ்

Latest Videos

click me!