தமிழ் சினிமாவில் அதிக பெண் ரசிகைகளை கொண்ட நடிகர்களில் மாதவனும் ஒருவர். மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான மாதவன் தொடர்ந்து மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் சாக்லேட் பாய் ஹீரோவாக மாறினார். பின்னர் அடுத்தடுத்து மணிரத்னம் படங்களில் வாய்ப்பு மாதவனுக்கு கிடைத்தது. கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து போன்ற படங்களில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து மாறுபட்ட திறமையை வெளிப்படுத்தினார்.
ஒரு சில தோல்வி படங்களை கொடுத்திருந்தாலும் வணிக ரீதியாக வெற்றி பெற்ற பல படங்களையும் கொடுத்துள்ளார். தமிழில் அறிமுகமான அதே காலக்கட்டத்தில் பாலிவுட்டிலும் தனது கெரியரை தொடங்கினார் மாதவன். ஹிந்தியில் ரங் தே பசந்தி, குரு, 3 இடியட்ஸ் பல வெற்றிப் படங்களில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் 2012-ம் ஆண்டில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பின்னர் 2015-ம் ஆண்டு ஹிந்தியில் தனு வெட்ஸ் மனு படத்தின் மூலமும், தமிழில் 2016-ம் ஆண்டு இறுதி சுற்று படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். மேலும் 2017-ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படம் திருப்புமுனை படமாக அமைந்தது, இறுதி சுற்று, விக்ரம் வேதா இரண்டு படங்களுமே வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த மாதவன் பின்னர் ராக்கெட்ரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதையும் மாதவனுக்கு பெற்று தந்தது.
அதே போல் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. ஆனால் இந்த படத்தில் நடிக்க கோரி கௌதம் மேனன் தன்னிடம் கோரியதாகவும், சில காரணங்களால் மாதவன் அதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை நடிகர் மாதவனே ஒருமுறை உறுதிப்படுத்தி உள்ளார்.