Vijay Tv Top 5 Serial: போனமுறை விட்ட இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்! TRP-யில் டாப்புக்கு வந்த டக்கர் தொடர்!

Published : Nov 02, 2023, 10:49 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் டாப் 5 இடங்களை தட்டி தூக்கிய, சீரியல்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.  

PREV
15
Vijay Tv Top 5 Serial: போனமுறை விட்ட இடத்தை பிடித்த விஜய் டிவி சீரியல்! TRP-யில் டாப்புக்கு வந்த டக்கர் தொடர்!

சிறகடிக்க ஆசை:

இந்த வாரம் விஜய் டிவியில், 7.04 TRP புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.. கடந்த வாரம் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட, 'சிறகடிக்க ஆசை' சீரியல். தந்தையின் உயிரை காப்பாற்ற, வீட்டு பத்திரத்தை தேடியும் கிடைக்காததால், உயிராக நினைத்த காரை விற்று அப்பாவின் ஆபரேஷனுக்கு முத்து பணம் காட்டுகிறார். பத்திரம் எங்கு போனது... மீனா அதனை கண்டுபிடித்து, அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து  மீண்டும் முத்துவுடன் சேர்வாரா? என்கிற எதிர்பார்ப்புடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

25

பாக்கிய லட்சுமி:

போன வாரம் முதல் இடத்தை பிடித்த, 'பாக்கியலட்சுமி' தொடர், இந்த வாரம் 6.79 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. பாக்கியா எழில் வாழ்க்கையை காப்பாற்ற ஒருபுறம் போராடி வரும் நிலையில், அமிர்தா கணவர் விஷயத்தில் தனியாக முடிவெடுக்க முடியாமல், கோபியின் உதவியை கேட்க, அதற்க்கு ராதிகா முட்டு கட்டையாக நிற்கிறார். இதனை எப்படி பாக்கியா சமாளிப்பார் என்றும், அமிர்தாவுக்கு இந்த உண்மை தெரியவந்தால் அவர் என்ன முடிவு எடுப்பார் என்பதும் யூகிக்க முடியாத ஒன்றாக உள்ளது.

சன் டிவி பிரைம் டைம்.. சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து அதிரடியாக விலகும் கதாநாயகி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

35
pandian stores 2

பாண்டியன் ஸ்டார்:

கடந்த வாரம் துவங்கப்பட்ட 'பாண்டியன் ஸ்டோர்' சீசன் 2 சீரியல் 6.65 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் வாரத்திலேயே டாப் 5 லிஸ்டில் இணைந்துள்ளதால், இந்த சீரியல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

45

ஆஹா கல்யாணம்:

விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்ட, மஹா - சூர்யா எப்படி வாழ்க்கையில் இணை பிரியாத ஜோடிகளாக மாற போகின்றனர், என்பதை எதார்த்தமான காட்சிகளோடு கொஞ்சம் கூட போர் அடிக்காமல் கொண்டு செல்கிறார் இந்த சீரியல் இயக்குனர்.  ஆஹா கல்யாணம் தொடர் ஆரம்பத்தில், TRP லிஸ்டில் மிகவும் பின்தங்கி இருந்தது, ஆனால் தற்போது 6.04 புள்ளிகளுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

55

யாரும் எதிர்பாராத விதமாக அஜய்யை, தன்னுடைய குடும்பத்தையும் தங்கை நர்மதாவையும் காப்பாற்ற காவேரி திருமணம் செய்து கொள்ளும் நிலையில், இந்த விஷயம் நிவினுக்கும் தெரிய வருகிறது. மனதால் மிகவும் நொறுங்கி போன நிவின், அடுத்து என்ன முடிவெடுப்பார் என்பது ஒரு புறம் இருந்தாலும்... காவேரி மீது அஜய்க்கு காதல் வருமா? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இந்த தொடர்ந்து இந்த வாரம் 5.27 TRP புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது.

Keerthy Suresh: அரசியலில் குதிக்கிறாரா கீர்த்தி சுரேஷ்? MLA நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோஸ் வைரல்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories