Published : May 05, 2026, 07:49 PM ISTUpdated : May 05, 2026, 07:51 PM IST
Jiiva Father RB Choudary Passed Away: விஜய்யின் பூவே உனக்காக படத்தை கொடுத்த தயாரிப்பாளர் ஜீவாவின் தந்தை ஆர் பி சௌத்ரி வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஜீவாவின் தந்தையும் ஆர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான ஆர் பி சௌத்ரி வாகன விபத்தில் பலியான சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆர் பி சௌத்ரி. சினிமா துறைக்கு வருவதற்கு முன் ஆர் பி சௌத்ரி எஃகு ஏற்றுமதி மற்றும் நகை தொழில்களில் பணியாற்றியிருக்கிறார்.
26
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம்
அதன் பின்னர் சினிமா துறைக்குள் நுழைந்த ஆர் பி சௌத்ரி முதலில் மலையாள சினிமாவில் சூப்பர் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக படங்களை தயாரித்துள்ளார். அதில் அடிபாபம், லயனம், கல்பனா ஹவுஸ் ஆகிய படங்கள் அடங்கும். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கால் பதித்த ஆர் பி சௌத்ரி குட் நைட் கொசுவலைகளை தயாரித்த ஆர் மோகன் உடன் இணைந்து சில படங்களை தயாரித்தார்.
36
ஆர் பி சௌத்ரி வாகன விபத்தில் பலி
அதன் பிறகு இருவரும் பிரிய முடிவு செய்ததைத் தொடர்ந்து தனது சூப்பர் என்ற பட நிறுவனத்தின் பெயரை சூப்பர் குட் பிலிம்ஸ் என்று பெயர் மாற்றம் செய்து படங்களை தயாரித்து ஹிட் கொடுத்தார். ஆர் பி சௌத்ரி தயாரிப்பில் தமிழில் வெளியான முதல் படம் புது வசந்தம். இந்தப் படத்தைத் தொடர்ந்து புரியாத புதிர், சேரன் பாண்டியன், ஊர் மரியாதை, சின்ன மேடம், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, சூரிய வம்சம், லவ் டுடே, பூ மகள் ஊர்வலம், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஷாஜஹான், திருப்பாச்சி, ஜில்லா என்று ஏராளமான படங்களை தயாரித்துள்ளார்.
46
தயாரிப்பாளர் ஆர்பி சௌத்ரி
தனது மகன் ஜீவாவை வைத்து தித்திக்குதே என்ற படத்தைத் தயாரித்தார். இப்படி பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த ஆர் பி சௌத்ரி சற்று முன் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தனது சொந்த ஊரான இராஜஸ்தான் மாநிலம் உதய்பூருக்கு உறவினர்களுடன் காரில் சென்ற போத எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆர் பி சௌத்ரி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்த அவரது உறவினர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக கிட்டத்தட்ட 93 இயக்குநர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்பி சௌத்ரியின் உடலானது நாளை சென்னை கொண்டு வரப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி வாகை சூடிய விசில் அடித்து நடிகர் ஜீவா கொண்டாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். இந்த நிலையில் தான் இன்று அவரது அப்பாவின் மறைவு செய்தி அவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர் பி சௌத்ரிக்கு ஜீவா மட்டுமின்றி ஜித்தன் ரமேஷ், ஜீவன், சுரேஷ் ஆகிய மகன்களும் இருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.