29 முதல் LIK வரை... இந்த வாரம் தியேட்டர் & ஓடிடி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் இதோ

Published : May 05, 2026, 11:39 AM IST

கோடை விடுமுறை ஸ்டார்ட் ஆகிவிட்டதால் ஏராளமான புதுப்படங்கள் வார வாரம் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் மே 6 முதல் 8-ந் தேதி வரை ரிலீஸ் ஆக உள்ள படங்கள் பற்றி பார்க்கலாம்.

PREV
17
தியேட்டர் ரிலீஸ் என்னென்ன?

தனுஷின் கர திரைப்படம் கடந்த வாரம் சிங்கிளாக ரிலீஸ் ஆனதை போல், இந்த வாரமும் ஒரே ஒரு படம் தான் திரைக்கு வர உள்ளது. அப்படத்தின் பெயர் 29. இப்படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கி இருக்கிறார். இப்படத்தின் கதைச்சுருக்கம் என்னவென்றால், சென்னையில் வாழும் ஒரு 29 வயது இளைஞனின் வாழ்க்கையும், அதில் நடக்கும் நிகழ்வுகளையும் சுற்றி நடக்கும் கதை தான் இந்த 29. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 8-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

27
ஓடிடி ரிலீஸ்

LIK (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி)

டைம் டிராவல் கான்செப்ட்டில் உருவாகியுள்ள ரொமான்டிக் காமெடி படமான இது, காதல் மற்றும் உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை காமெடியாக சொல்கிறது. ஜாலியான காமெடி, எமோஷனல் காட்சிகளுடன் இது ஒரு லைட் ஹார்ட் என்டர்டெய்னராக இருக்கும். இப்படம் மே 6ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி, கெளரி கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

37
ஓ பட்டர்ஃபிளை

தமிழ் சினிமால கதைக்காகவும், கேரக்டருக்காகவும் மட்டுமே தேர்வு செஞ்சு நடிக்க கூடிய நடிகைகளில் நிவேதிதா சதீஷும் ஒருவர். சில்லு கருப்பட்டி, செத்தும் ஆயிரம் பொன், கேப்டன் மாதிரியான படங்களில் இவரோட கேரக்டர் அதிக கவனம் பெற்றது. சுழல் வெப் சீரிஸ்ல கூட முக்கியமான ரோலில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் உருவான படம் தான் ஓ பட்டர்ஃபிளை. விஜய் ரங்கநாதன் இயக்கிய இப்படம் மே 8 முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

47
சாத்தான் : தி டார்க்

ஐரா, எஃப் ஜே நடிப்பில் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கியுள்ள படம் சாத்தான் ; தி டார்க். மலை கிராமமான அஸ்தினாபுரத்தில் சாத்தானை வழிபடுபவர்களும் இருக்கிறார்கள். அவர்களினால் கிராம மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. சில உயிர் பலிகளும் ஏற்படுகின்றன. அவர்கள் சாத்தானை வழிபடுபவதற்கான காரணம் என்ன? அவர்களிடம் இருந்து மலை கிராம மக்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதே இப்படத்தின் கதை. இப்படம் மே 8-ந் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

57
டகாட்

அடிவி சேஷ், மிருணாள் தாக்கூர் நடிச்ச இந்த தெலுங்கு ஆக்‌ஷன்-டிராமா, முன்னாள் காதலியால் ஏமாற்றப்பட்டு குற்றவாளியாக்கப்பட்ட ஒரு ஹீரோவைப் பற்றியது. அவளைத் தேடி கண்டுபிடித்து, தனக்கு நடந்த அநீதிக்கு பழிவாங்குவதே கதை. க்ரைம், எமோஷன், ரிவெஞ்ச் என கதை விறுவிறுப்பாக நகரும். இப்படம் வருகிற மே 8-ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

67
Vaazha 2

ஹஷீர், அலன், அஜின், விநாயக் என்ற நான்கு நண்பர்களின் கதை இது. குடும்ப அழுத்தம், படிப்பு, சமூக சூழல் என பல பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இவர்களின் நட்பு, அவர்களை எப்படி வளரச் செய்தது என்பதே படத்தின் கதை. மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படம் மே 8 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

77
Bharatanatyam 2

2025-ல் வந்த 'பரதநாட்டியம்' படத்தின் தொடர்ச்சி இது. சசிதரன் நாயரின் குடும்பக் கதையை இந்த பாகம் காட்டுகிறது. தந்தையின் இரண்டாவது குடும்பத்தைச் சுற்றியுள்ள பிரச்சனைகளைத் தீர்க்க அவர்கள் ஸ்ரீகந்தாபுரம் செல்கிறார்கள். அங்கு நடக்கும் க்ரைம், ஊழல், டென்ஷனான சம்பவங்களே படத்தின் முக்கியப் பகுதி. இப்படம் வருகிற மே 8-ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories