Bobby Simha Car Accident: விபத்தில் சிக்கிய பாபி சிம்பாவின் கார் - 3 பேர் படுகாயம்!

Published : Apr 19, 2025, 06:00 PM IST

நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மது போதையில் 7 வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.  

PREV
14
Bobby Simha Car Accident: விபத்தில் சிக்கிய பாபி சிம்பாவின் கார் -  3 பேர் படுகாயம்!

பாபி சிம்ஹாவின் அறிமுகம்:

தமிழ் சினிமாவில் கடந்த 2007-ஆம் ஆண்டு 'மாய கண்ணாடி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பாபி சிம்ஹா. இதை தொடர்ந்து 'காதலில் சொதப்புவது எப்படி', 'பீட்சா', 'நான் ராஜாவாக போகிறேன்', 'சூது கவ்வும்' போன்ற பல படங்களில், குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.

இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது, 2014-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா ' திரைப்படம் தான். இந்த படத்தில் அசால்ட் சேதுவாக நடித்து, அலப்பறை செய்தார். இந்த படத்தில் இவருடைய நடிப்புக்காக சிறந்த குணசித்ர நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

24
Bobby Simha upcoming movies:

பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாக உள்ள படங்கள்:

அடுத்தடுத்து சில படங்களில் ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார். இவர் ஹீரோவாக நடித்த படங்கள் இவருக்கு பெரிதாக கை கொடுக்காத நிலையில், தற்போது தொடர்ந்து வில்லன் சாயல் கொண்ட ரோல்களை தேர்வு செய்து நடிக்கிறார். தற்போது இவரின் கைவசம், தமிழில் இந்தியன் 3 படம் மட்டுமே உள்ளது. 

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஆலந்தூரில், மதுபோதையில் வாகனம் ஓட்டி ஏழு வாகனங்கள் மீது மோதி, விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாபி சிம்ஹாவிடம் வீடு கட்ட பணம் வாங்கி கொண்டு விபூதி அடித்த சம்பவம் ! கேட்டால் கொலை மிரட்டல்.. குமுறிய நடிகர்!
 

34
Bobby Simha Car Accident:

விபத்தில் சிக்கிய பாபி சிம்ஹா கார்:

விபத்து நடந்த நேரத்தில் நடிகர் காரில் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மெர்சிடிஸ் பென்ஸ் காரை ஓட்டி வந்த 39 வயதான கார் ஓட்டுநர் எஸ். புஷ்பராஜ்,  சிம்ஹாவின் தந்தையை மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ நிலையத்திற்கு கூட்டி சென்று இறக்கிவிட்டு விட்டு.. வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​ஆலந்தூர் மெட்ரோ நிலையம் நோக்கி கத்திப்பாரா கிரேடு பிரிப்பானில் இறங்கும்போது, ​​ஓட்டுநர் வேகமாக வந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு கார்கள், மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு ஆட்டோரிக்‌ஷாக்கள் என ஏழு வாகனங்களை மோதியது. இதில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்து, அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
 

44
Police arrested

7 வாகனங்கள் மீது மோதி 3 பேர் படுகாயம்:

ஓட்டுநர் மது அருந்தியிருந்ததாகவும், சோதனையில் அவருக்கு 100 மில்லி இரத்தத்தில் 400 மில்லிகிராம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுடன், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். விபத்தை ஏற்படுத்திய கார் பாபி சிம்ஹாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீ சினிமாவில் வில்லன்.. நாங்கள் நிஜத்திலேயே வில்லன்! நடிகர் பாபி சிம்ஹாவிற்கு மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு!

Read more Photos on
click me!

Recommended Stories