போதைப்பொருள் விவகாரம்: போலீசார் விசாரணையில் அந்தர் பல்டி அடித்த ஷைன் டாம் சாக்கோ !

Published : Apr 19, 2025, 01:40 PM ISTUpdated : Apr 19, 2025, 01:49 PM IST

நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஹோட்டலுக்குத் தன்னைத் தேடி வந்தது போலீஸார் என்று அடுத்த நாள் காலையில் தான் தெரியும் என்றும், போதைப்பொருட்களைத் தான் பயன்படுத்துவதில்லை என்றும் விசாரணையில் பரபரப்பு விளக்கம் கொடுத்துள்ளார்.  

PREV
15
போதைப்பொருள் விவகாரம்: போலீசார் விசாரணையில் அந்தர் பல்டி அடித்த ஷைன் டாம் சாக்கோ !

போலீஸார் என்பதே தனக்கு தெரியாது 

போதை பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய நடிகர் ஷைன் டாம் சாக்கோ போலீசாரின் விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தின் கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் அவர்.... ஹோட்டலுக்குத் தன்னைத் தேடி வந்தது போலீஸார் என்பதே தனக்கு அடுத்த நாள் காலையில் தான் தெரிய வந்ததாக கூறியுள்ளார். 
 

25
Am not used Drug

போதைப்பொருட்களை பயன்படுத்துவதில்லை:

நண்பர்கள் போன் செய்து இதுகுறித்து கேட்டபோது தான் ஹோட்டல் அறைக்கு வந்தது போலீஸார் என்று தெரியும். போலீசாரை ஏமாற்றும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார். அதே போல் போதைப்பொருட்களைத் தான் பயன்படுத்துவதில்லை என்றும் ஷைன் போலீஸாரிடம் தெரிவித்தார்.
 

35
Is there a connection to drug trafficking?

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு உள்ளதா?

தன்னை இதில் சிக்கவைத்ததில் சிலரின் சதி திட்டம் இருக்கலாம் என கூறியுள்ளார். எனினும் இவருக்கு போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஷைன் டாம் சாக்கோவின் தொலைபேசி அழைப்புப் பதிவுகள் உட்பட அனைத்தையும் அலசி ஆராய்ந்து துருவி துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீசார்.
 

 

45
Shine Tom Chacko Police Investigation:

ஆதாரங்கள் கிடைக்கும் பச்சத்தில் சட்டப்படி காவலில் எடுத்து விசாரணை:

இதில் தக்க ஆதாரங்கள் கிடைக்கும் பச்சத்தில், ஷைன் டாம் சாக்கோவை சட்டப்படி காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதே போல் இவர் போதை பொருள் பயன்படுத்தினாரா என்பதை அறிய ஷைனை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்தும் போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

55
Shine Tom Chacko Not Handover 2 Cell phone and Laptop

2 போன்களை அவர் ஒப்படையவில்லை:

இதற்கிடையில், ஷைன் டாம் சாக்கோவின் தொலைபேசி அழைப்பையும் வாட்ஸ்அப் சேட் போன்றவற்றை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். கூகுள் பே பரிவர்த்தனை, வங்கி நேரடி பண பரிமாற்றம் போன்ற விஷயங்களையும் போலீசார் சோதனை செய்து வருவதால், தற்போது மலையாள திரையுலகில் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை ஷைன் தன்னுடைய மூன்று தொலைபேசிகளில் ஒன்றை மட்டுமே ஒப்படைத்துள்ளார். மீதம் 2 போன்களை அவர் ஒப்படையவில்லை. அதே போல் அவரது லாப் டாப் போன்றவற்றையும் போலீசார் சோதனையிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Read more Photos on
click me!

Recommended Stories