பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சுவர் ஏறி குதித்து வெளியேறி வீட்டிற்கு செல்லும் அளவிற்கு மனஉளைச்சலுக்கு ஆளானவர் பரணி. 'நாடோடிகள்' படம் மூலம் பிரபலமான இவருக்கு, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து, வெற்றி பெரும் வாய்ப்பு இருந்தும், ஒரு சில காரணங்களால் வெளியேறினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர், இவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள, படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மேலும், பல்வேறு சமூக அக்கறை கொண்ட விஷயங்களையும் செய்து வருகிறார்.
அந்த வகையில், கடந்த வாரம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகரும், இயற்க்கை ஆர்வலருமான விவேக்கிற்கு பிக்பாஸ் பரணி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அப்துல் கலாமுடன் விவேக் இருக்கும் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி... மெழுகு வத்தி ஏற்றி சில நிமிடங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பின்னர், பொதுமக்கள் அனைவருக்கும்... மரக்கன்றுகளை, கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதை தெரிவிக்கும் விதமாக, முகக்கவசங்களும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாக, பலர் 'பிக்பாஸ்' பேரணிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.