சூது கவ்வும் படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். அப்படத்தில் சைடு ரோலில் நடித்த இவர். இதையடுத்து பீட்சா 2 வில்லா படம் மூலம் ஹீரோவாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து தெகிடி, கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, மனமதலீலை, சில நேரங்களில் சில மனிதர்கள் என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார் அசோக் செல்வன்.
24
கடந்தாண்டில் அதிக தமிழ் படங்களில் நடித்த ஹீரோவும் அசோக் செல்வன் தான். 2022-ம் ஆண்டில் மட்டும் இவர் ஹீரோவாக நடித்த சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மதலீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம் என 5 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகின. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இது ஒவ்வொன்றும் வெவ்வேறு ஜானர்களை கொண்ட படமாகும். தற்போது அசோக் செல்வன் கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன.
குறிப்பாக பா.இரஞ்சித் தயாரிக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் அசோக். இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து தயாராகி வருகிறது. இதில் அவருடன் சாந்தனுவும் மற்றொரு ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர நெஞ்சமெல்லாம் காதல் என்கிற படத்தையும் கைவசம் வைத்துள்ளார் அசோக் செல்வன். இப்படி பிசியான நடிகராக வலம் வரும் அவருக்கு, விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
44
நடிகர் அசோக் செல்வனுக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவர் பிரபல தயாரிப்பாளரின் மகளை காதலித்து வருகிறாராம். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்டதால் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அசோக் செல்வன் காதலிக்கும் அந்த பெண் தமிழ் சினிமாவில் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அந்த பெண் யார் என்பதை தான் தற்போது நெட்டிசன்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.