இப்படி சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வரும் வனிதா, தற்போது கே.எஃப்.சி-யில் ஆசை ஆசையாய் சாப்பிட சென்று அப்செட் ஆனதாக பதிவிட்டுள்ளார். ஐதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்தில் உள்ள கே.எஃப்.சி-க்கு சாப்பிட சென்றபோது அங்கு தனக்கு தரப்பட்ட உணவு மிகவும் மோசமாக இருந்ததாக வனிதா புகார் தெரிவித்து உள்ளார்.
கஸ்டமர் சர்வீஸும் மோசமாக இருந்ததாக அந்த டுவிட்டில் குறிப்பிட்டுள்ள வனிதா, தனக்கு கொடுக்கப்பட்ட சிக்கன் பீஸ் மிகவும் சின்னதாக இருந்ததாக பதிவிட்டு, உலகத்தில் இதுபோன்ற சிறிய சிக்கனை பார்த்ததுண்டா, இது சிக்கனா அல்லது காக்காவா என கேள்வி எழுப்பி உள்ளார். அந்த சிக்கனின் புகைப்படங்களையும் பதிவிட்டு தனது அதிருப்தியை பதிவு செய்துள்ளார் வனிதா. உங்களுக்கு இப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததற்காக வருந்துகிறோம் என கே.எஃப்.சி-யும் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்... Dhanush : என்னது இவங்க மறுபடியும் சேரப்போறாங்களா..! குட் நியூஸ் உடன் காத்திருக்கும் தனுஷ்