சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அசோக் செல்வன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். அவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே படங்களின் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். மேலும் நித்தம் ஒரு வானம், போர் தொழில் போன்ற படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
25
இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து வருகிறார். இதில் ப்ளூ ஸ்டார் படத்தில் தன்னுடன் இணைந்து நடித்து வரும் கீர்த்தி பாண்டியனுக்கும் அசோக் செல்வனுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் அன்பிற்கினியாள், கொஞ்சி பேசினாள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கீர்த்தி பாண்டியன் - அசோக் செல்வன் காதல் பற்றி எந்த கிசுகிசுக்களும் வெளியாகவில்லை. ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அதன்படி இரு வீட்டாரின் சம்மத்துடன் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த 13-ம் தேதி திருநெல்வேலியில் நடைபெற்றது.
45
இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டு அசோக் செல்வன் – கீர்த்தி தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பிந்தைய போட்டோ ஷூட் ஒன்று நடந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் இருவரும் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.