Arulnidhi: வாவ்... இரண்டாவது குழந்தைக்கு அப்பாவான நடிகர் அருள்நிதி! உச்சகட்ட மகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

நடிகர் அருள்நிதிக்கு (Arulnidhi)  ஏற்கனவே மகிழ் என்கிற மகன் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். இதனை அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்க பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் திரையுலகில் தொடர்ந்து, ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அருள்நிதி.

இந்நிலையில் இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே மகிழன் என்கிற மகன் உள்ளார்.


இந்நிலையில் இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு கீர்த்தனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே மகிழன் என்கிற மகன் உள்ளார்.

இதை தொடர்ந்து இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த கீர்த்தனாவிற்கு, அழகிய பெண் குழந்தை பிறந்த தகவலை தற்போது அருள்நிதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ’ஒரு குட்டி தேவதை எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். மகிழ் அண்ணா, அம்மா அப்பா ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!