Biggboss Tamil 5: முதல் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் ஆங்கரிங் எப்படி? கெத்தா... வெத்தா..!

Published : Nov 28, 2021, 11:04 AM IST

நடிகரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் (Biggboss tamil 5) தொகுப்பாளருமான கமல்ஹாசன் (Kamalhassan)தற்போது கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில், தனிமையில் இருக்கும்  நிலையில் அவருக்கு பதில் நேற்றைய தினம், பிரபல நடிகை  ரம்யா கிருஷ்ணன் (Ramya Krishnan) தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். அவருடைய ஆங்கரிங் எப்படி இருந்தது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.  

PREV
18
Biggboss Tamil 5: முதல் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் ஆங்கரிங் எப்படி? கெத்தா... வெத்தா..!

ஒவ்வொரு வாரமும், மிகவும் பரபரப்பாக பிக்பாஸ் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் கமல் கலந்து கொள்வாரா? மாட்டாரா? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்த நிலையில்.. எவ்வித தொய்வும் இல்லாமல் நிகழ்ச்சி அமோகமாக நடந்தது.

 

28

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன், ரசிகர்களுக்காக மருத்துவமனையில் இருந்தே பேசிய கமல்... கொரோனா தொற்று, வதந்தி என பலர் தற்போது வரை நினைத்து கொண்டிருப்பது ஆச்சர்யமாக இருப்பதாகவும், கொரோனா தொற்றின் அபாயம் இன்னும் நீங்கவில்லை என்பதை உணர்ந்து அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தினார்.

 

38

பின்னர் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தன்னுடைய தோழி ஒருவர் தொகுத்து வழங்குவார் என அறிவித்து, ரம்யா கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்தார். ரம்யா கிருஷ்ணன் அவரை தன்னுடைய குரு என்று மிகவும் பணிவுடன் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

 

48

இதை தொடர்ந்து , வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்ட பட்ட பின்னர் போட்டியாளர்கள் மத்தியில் என்ட்ரி கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார் ரம்யா கிருஷ்ணன்.

 

58

அனைத்து போட்டியாளர்கள் பற்றியும் தன்னுடைய கண்ணோட்டத்தை கூறி அவர்களை சந்தோஷ படுத்திய பின்னர், முதலில் ரம்யா கிருஷ்ணன் சிபி மற்றும் அக்ஷரா பஞ்சாயத்து பற்றி பேசினார்.

 

68

மாணவர்களாக - டீச்சர் டாஸ்கில் வார்டானாக இருந்த சிபி யாரையும் எதுவும் செய்ய விடவில்லை என்பதை விசாரித்து, அக்ஷராவுக்கு அதிக பட்ச ஆதரவாக பேசியது சிபி ரசிகர்களை சற்று கடுப்பேற்றும் விதமாகவே இருந்தது.

 

 

78

எனினும் அதனை கூலாக ஹாண்டில் செய்து, அக்ஷராவின் கோபத்தை தூக்கி போடவேண்டும் என்றும் கூறினார்.  முதல் நாள் என்பதால்... தன்னுடைய தனித்துவமான பாணியில் ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது கெத்தாகவே இருந்தது என, ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

 

 

88

இன்றைய தினம், யாரை எப்படி ரம்யா வறுத்தெடுப்பார் என்பதை பார்க்க பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே நேற்றைய தினத்தை விட இன்றைய நாள் நிகழ்ச்சியை பரபரப்பாக எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories