பாண்டியன் ஸ்டோர் புதிய முல்லை காவியாவா இது? டீப் நெக்... ஒயிட் சல்வாரில் நயன்தாராவையே ஓவர் டேக் செய்யும் அழகு!

First Published Nov 28, 2021, 1:47 PM IST

'பாண்டியன் ஸ்டோர்' (Pandian Store) புதிய முல்லை, காவியா (Kaaviyaa) ... நயன்தாரா (Nayanthara)  - விக்னேஷ் சிவன் (Vignesh shivan) தயாரிப்பில் உருவாகும் படத்தில் கமிட் ஆகியுள்ள நிலையில் நயனையே ஓவர் டேக் செய்யும் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

 விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்களின் மத்தியில் நல்ல இடத்தை பிடித்து ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலுக்கு தனி இடம் உண்டு.

தெலுங்கில் 'வடிநம்மா' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'வரலக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்' எனவும் இந்தியாவில் மொத்தம் 8 மொழிகளிலும் இலங்கையிலும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடர் ஒளிபரப்பாகி வருவது அந்த சீரியல் மீதான ரசிகர்களின் வரவேற்புக்கு சிறந்த உதாரணம்.

இந்த சீரியலில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த ஜோடியாக முல்லை - கதிர் ஜோடி இருந்து வருகிறது. முதலில் முல்லையாக விஜே சித்ராவும், கதிராக குமரனும் நடித்து வந்தனர்.

சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் விஜே சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்ததால், இவரது கதாபாத்திரத்தில் 'பாரதி கண்ணம்மா' சீரியலில் நடித்து வந்த காவ்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆரம்பத்தில் இவரது நடிப்பு சில விமர்சனங்களை பெற்றாலும், போக போக இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

இவரது நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக.. 'லிப்ட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து, பிக்பாஸ் கவின் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நடிக்க உள்ள திரைப்படம் 'ஊர் குருவி'. காவியா ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

மேலும் அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்து வரும் இவர் தற்போது வெள்ளை நிற சல்வாரில் டீப் நெக் வைத்து, எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சும்மா நயன்தாராவையே ஓவர் டேக் செய்யும் அழகில் மிளிர்கிறார். அந்த புகைப்படங்கள் இதோ...

click me!