பைக் ஓட்டுவதில் அதிகம் ஆர்வம் கொண்டவர் அஜித். சில நாட்கள் ஓய்வு கிடைத்தால் கூட நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக பைக் ட்ரிப் கிளம்பி விடுவார் அஜித். அந்த வகையில் கடந்த மாதம் லடாக்கிற்கு பைக் ட்ரிப் கிளம்பினார் அஜித். பின்னர் அங்கிருந்து காஷ்மீர், மணாலி என தொடர்ந்து ஒரு மாதமாக வட இந்தியாவில் பைக் ட்ரிப் மேற்கொண்டு வந்தார் அஜித்.