Ajith salary :வலிமை தந்த மவுசு.. சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அஜித்! AK 62 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

Ganesh A   | Asianet News
Published : Mar 23, 2022, 12:23 PM IST

Ajith salary : ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், அஜித் அடுத்ததாக நடிக்க ஏ.கே.62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. 

PREV
14
Ajith salary :வலிமை தந்த மவுசு.. சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய அஜித்! AK 62 படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா?

வசூல் வேட்டை நடத்திய வலிமை

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றது. எச்.வினோத் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை வாரிக் குவித்தது. இதனால் தயாரிப்பாளரும், படக்குழுவும் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர்.

24

ஏ.கே.61-க்கு தயாராகும் அஜித்

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் ஏ.கே.61 படத்தை எச்.வினோத் தான் இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அதில் ஒன்றி மங்காத்தா பாணியில் வில்லன் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இந்த வேடத்திற்காக நீளமான வெள்ளை நிற தாடி, காதில் கடுக்கன் என தோற்றத்தை மாற்றி நடிக்க தயாராகி வருகிறார் அஜித்.

34

விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்த அஜித்

ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்கப்படாத நிலையில், அஜித் அடுத்ததாக நடிக்க ஏ.கே.62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி நடிகை நயன்தாராவின் காதலனும், பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் தான் இப்படத்தை இயக்க உள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க உள்ளது.

44

சம்பளத்தை உயர்த்திய அஜித்

இந்நிலையில், ஏ.கே.62 படத்துக்காக நடிகர் அஜித் தனது சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. வலிமை படத்துக்கு ரூ.55 கோடி சம்பளமாக வாங்கிய அஜித், தனது படங்கள் வரிசையாக வெற்றியடைந்து வருவதால் ஏ.கே.62 படத்தில் நடிக்க ரூ.100 கோடி சம்பளமாக கேட்டாராம். ஆனால் லைகா நிறுவனமோ அவர் கேட்டதை விட 5 கோடி ரூபாய் அதிகமாக கொடுத்து அஜித்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

இதையும் படியுங்கள்... Maamanithan : மாமனிதன் மே 6-ந் தேதி ரிலீசாகாது.... ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றப்பட்டதால் ரசிகர்கள் குழப்பம்

click me!

Recommended Stories