Beast movie : பீஸ்ட் மோடில் உதயநிதி ஸ்டாலின்... ரஜினி, சூர்யாவை தொடர்ந்து விஜய் படத்தையும் தட்டித்தூக்கினார்

First Published | Mar 23, 2022, 7:52 AM IST

Beast movie : நடிகரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது, நடிப்பது மட்டுமின்றி வெளியிட்டும் வருகிறார். 

தயாரிப்பாளராக திரையுலகில் எண்ட்ரி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற பட நிறுவனத்தை தொடங்கி, தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக அறிமுகமானார். அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய், கமல், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வந்தார். 

நடிப்பில் பிசியான உதயநிதி

இவர், கடந்த 2012-ம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதையடுத்து ‘இது கதிர்வேலன் காதல்’, கெத்து, நண்பேண்டா, நிமிர், மனிதன், சைக்கோ என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து அசத்தினார் உதயநிதி. தற்போது இவர் கைவசம் நெஞ்சுக்கு நீதி, ஏஞ்சல், கண்ணை நம்பாதே, மாமன்னன் போன்ற படங்கள் உள்ளன.

Tap to resize

ரெட் ஜெயண்ட் மூவீஸ்

இவர் தனது ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் படங்களை தயாரிப்பது, நடிப்பது மட்டுமின்றி வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில், கடந்தாண்டு ரஜினி- சிவா கூட்டணியில் வெளியான அண்ணாத்த படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய உதயநிதி, தமிழகம் முழுவதும் அப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிட்டார். இதையடுத்து அண்மையில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், பிரபாஸின் பிரம்மாண்ட படைப்பான ராதே ஷ்யாம் ஆகிய படங்களையும் தமிழகத்தில் வெளியிட்டது உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான்.

உதயநிதி வசம் சென்ற பீஸ்ட்

இந்நிலையில், அந்நிறுவனம் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் படத்தையும் கைப்பற்றி உள்ளது. அதன்படி இப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அப்படத்தை தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... சதுரங்க வேட்டை பாணியில் மோசடி! ரூ.5 கோடி முதலீடு பண்ணா ரூ.500 கோடி கிடைக்கும்னு சொல்லி பிரபல நடிகரிடம் கைவரிசை

Latest Videos

click me!