Published : Mar 06, 2025, 12:21 PM ISTUpdated : Mar 07, 2025, 09:38 AM IST
நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் நடித்த நடிகர் அபிநய் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Abhinay Kinger Liver Disease : திரையுலகில் குணச்சித்திர வேடத்திலும் - காமெடியனாகவும் நடிக்கும் சிலர், யாரும் எட்ட முடியாத உச்சத்தை அடைந்த கதையும் உண்டு. அதே போல் முன்னணி ஹீரோவாக இருந்து அதலபாதாளத்தில் வீழ்ந்த கதையும் உண்டு. சினிமாவில் ஜெயிக்க திறமையும் - விடாமுயற்சியும் ஒருபக்கம் இருக்க வேண்டும் என்பது வாஸ்தவமாக இருந்தாலும், அதற்கான அதிஷ்டமும் கொஞ்சம் இருக்க வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.
26
துள்ளுவதோ இளமை படம் மூலம் அதிகம் கவனிக்கப்பட்டவர் அபிநய்
கஸ்தூரி ராஜா இயக்கத்தில், 'துள்ளுவதோ இளமை' திரைப்படத்தில் தனுஷ் அறிமுகமான போது, எந்த அளவுக்கு தனுஷின் தோற்றம் விமர்சனங்களுக்கு ஆளானதோ, அதே அளவுக்கு அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகர் தான் அபிநய். அழகும் - திறமையும் இருந்ததால், அபிநய் கதாநாயகனாக ஒரு ரவுண்டு வருவார் என பலர் எதிர்பார்த்தனர். இதற்கு ஏற்ற போல், துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து முடித்த கையேடு, அபிநய் 'ஜங்ஷன்' படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார். இந்த படத்தின் தோல்வியால், ஹீரோ ட்ராக்கில் இருந்து நகர்ந்து குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார்.
அந்த வகையில், ஹீரோவின் நண்பர் மற்றும் அமெரிக்க மாப்பிள்ளை கெட்டப்பில் ஏராளமான படங்களில் நடித்தார். இதுவரை தமிழில் 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2014 ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் பிஸ்னஸ் மேனாக நடித்திருந்தார். இதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
46
அம்மா உணவகத்தில் தான் 3 வேலை சாப்பாடு;
எப்படியும் அடித்துப் பிடித்து நிலையான நடிகர் என்கிற இடத்தை அபிநய் பிடிப்பார் என எதிர்பார்ப்பக்கட்ட நிலையில், இவருடைய அம்மாவின் மறைவு அபிநயை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. இதன் பின்னர் வாய்ப்புகளும் இல்லாமல் போனதால், தன்னுடைய வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் விற்று தான் ஜீவனம் நடத்தியதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் அபிநய் தெரிவித்திருந்தார். அதை போல் தினமும் அம்மா உணவகத்தில் சாப்பிட்டு வருவதாகவும் இவர் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து வாய்ப்புக்காக போராடி வந்த இவருக்கு பிரபலங்கள் சிலர் கை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வரை இவருக்கு பெரிதாக எந்த ஒரு பட வாய்ப்பு கிடைக்காமல் போனது. இந்நிலையில் தற்போது கல்லீரல் பிரச்சனை ( liver cirrhosis) காரணமாக மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வயிறு வீங்கி எலும்பும் தோலுமாக மாறி உள்ள அபிநயின் சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
66
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி வேண்டும்:
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக இவர் போராடி வருவதாகவும், இதுவரை தன்னுடைய மருத்துவ செலவுக்கு மட்டுமே 15 லட்சம் செலவாகி உள்ளதாகவும் . இன்னும் 28.5 லட்சம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். திரை உலகை சேர்ந்தவர்கள் மற்றும் நடிகர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இவருக்கு உதவி செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் ஒருபுறம் கூறிவரும் நிலையில், அபினைக்கு உதவ ரசிகர்களும் முன்வந்துள்ளனர். எனினும் தனுஷ் போன்ற பெரிய நடிகர்கள் இவரின் உயிர் காக்க கை கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.