கொரோனாவில் இருந்து மீண்டார் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகள்... மகிழ்ச்சியில் குடும்பத்தினர்...!

Published : Jul 26, 2020, 06:58 PM IST

கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்று உறுதி செய்யப்பட்ட நடிகர் அர்ஜுன் மகள் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   

PREV
17
கொரோனாவில் இருந்து மீண்டார் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் மகள்... மகிழ்ச்சியில் குடும்பத்தினர்...!

பிரபல கன்னட நடிகரும், ஆக்‌ஷன் சிங் அர்ஜுனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் கடந்த 7ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

27

39 வயதே ஆன நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம் கன்னட திரையுலகை மட்டுமல்லாது ஒட்டுமொத்த திரைப்பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

37

அதுமட்டுமின்றி 4 மாத கர்ப்பிணி மனைவியான மேக்னா ராஜை அவர் தவிக்கவிட்டுச் சென்றது பலரும் சோகத்தில் ஆழ்த்தியது. 

47

சிரஞ்சீவி சார்ஜாவின் குடும்பத்தினர் அந்த பேரிழப்பில் இருந்து மீள்வதற்குள் அவருடைய தம்பியும், பிரபல கன்னட நடிகருமான துருவா சார்ஜாவிற்கும், அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

57

இதனிடையே நடிகர் அர்ஜுனின்  மூத்த மகளும், தமிழில் பட்டத்து யானை, சொல்லிவிடவா ஆகிய படங்களில் ஹீரோயினாகவும் நடித்த ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. 

67

 இதுகுறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா, அனைவருக்கும் இனிய காலை வணக்கம், எனக்கு சமீபத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறந்த மருத்துவக் குழுவால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறேன். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் உங்களை கவனித்து கொள்ளுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள் என பதிவிட்டிருந்தார்.

77

தற்போது ஐஸ்வர்யா கொரோனா தொற்றிலிருந்து நல்ல படியாக மீண்டு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் ரசிகர்களும், குடும்பத்தினரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

click me!

Recommended Stories