பிரபல தொழில் அதிபருடன் பிக்பாஸ் ஜூலிக்கு விரைவில் திருமணம்?... தீயாய் பரவும் தகவல்...!

First Published | Jul 26, 2020, 4:56 PM IST

ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது விதவிதமாக கோஷம் போட்டு மீடியாக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஜூலி. அதன் மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.
ஜூலி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த போது அதை ரசிகர்கள் பெருமையாக பார்த்தார்கள்.ஆனால் இடையில் காயத்ரியுடன் சேர்ந்து கொண்டு ஜூலி செய்த சில காரியங்கள் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது.
Tap to resize

இதனால் தமிழ் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்கொண்டார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகும் ஜூலியை சோசியல் மீடியாவில் வறுத்தெடுப்பதை நெட்டிசன்கள் கைவிடவில்லை.
ஜூலி என்ன செய்தாலும், அதை மீம்ஸ் கிரியேட் செய்து கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இடையில் பட வாய்ப்புகள், கடை திறப்பு விழா, கல்லூரி நிகழ்ச்சிகள் என பிசியாக வலம் வந்தார்.
வீரத்தமிழச்சி என ஜூலியை பார்த்து மெய் சிலிர்த்த ரசிகர்கள் பலரும் அவரை ட்விட்டரில் மரண பங்கம் செய்தனர். கண்டபடி கமெண்ட் போட்டு தொல்லை கொடுத்த நெட்டிசன்களுக்கு ஜூலியும் பலமுறை அன்பாக சொல்லி பார்த்தார்.
ஆனால் யாரும் கேட்பதாகவே இல்லை. அதனால் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கம் அடியெடுத்து வைத்துள்ள ஜூலி விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்.
பொல்லாத உலகின் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்துள்ள ஜூலியின் கைவசம் அம்மன் தாயி, நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையமாக கொண்ட ஒரு படமும் உள்ளன.
இந்நிலையில் ஜூலிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால், யார் அந்த மாப்பிள்ளை என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Latest Videos

click me!