அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள வித் லவ் திரைப்படம் கடந்த வாரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆன நிலையில், அப்படத்தின் 3 நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். அப்படத்திலேயே தன்னுடைய நடிப்புத் திறமையை சாம்பிள் காட்டி இருந்த அவர், தற்போது முழு நேர நடிகராக மாறி நடித்துள்ள படம் தான் வித் லவ். இப்படத்தை மதன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் அபிஷன் ஜீவிந்த் ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்து உள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிப்ரவரி 6-ந் தேதி திரைக்கு வந்தது.
24
வரவேற்பை பெறும் வித் லவ்
ரிலீஸ் ஆகும் முன்பே வித் லவ் படத்திற்கு மிகப்பெரிய ஹைப் உருவானது. அதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்த் தான். அவர் ரிலீசுக்கு முன்பே அப்படத்தை பார்த்து சூப்பராக இருப்பதாக விமர்சனம் கொடுத்திருந்தார். ரஜினியே வியந்து பாராட்டிய படம் என்பதால் அதற்கு முதல் நாளே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படமும் இருந்ததால், முதல் நாளில் இருந்தே இதற்கு பாசிடிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கின.
34
பாசிடிவ் விமர்சனம்
திருமணத்துக்காக பொண்ணு பார்க்க போன இடத்தில் பள்ளிப்பருவ தோழியை சந்திக்கும் நாயகன், அவரிடம் தன்னுடைய முன்னாள் காதலி பற்றி பேசுகிறார். நாயகியும் தன்னுடைய முன்னாள் காதலன் பற்றி சொல்ல, இருவரும் தங்கள் பள்ளி பருவ காதலர்களை தேடிச் செல்லும் உணர்வுப்பூர்வமான பயணம் தான் இந்த வித் லவ். முதல் பாதியைக் காட்டிலும் இரண்டாம் பாதியில் தான் படம் பட்டாசாய் இருக்கிறது என விமர்சனங்கள் வருகின்றன. இதனால் படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறது.
அதன்படி வித் லவ் திரைப்படம் ரிலீஸ் ஆன மூன்று நாட்களில் டபுள் டிஜிட் எண்ணை எட்டி இருக்கிறது. அப்படம் 3 நாட்களில் ரூ.11 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இன்றைய நிலவரப்படி டாப் ஹீரோக்களின் படங்களே மூன்று நாட்களில் 10 வசூலை எட்ட படாதபாடு படுகிறது. ஆனால் அபிஷன் ஜீவிந்த் போன்ற புதுமுக நடிகர், தான் ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறார். இப்படத்திற்கு போட்டியாக பெரியளவில் படங்கள் எதுவும் இல்லாததால் சிங்கிளாக வசூலை வாரிக் குவித்து வருகிறது வித் லவ்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.