
தமிழ் சினிமாவில், 1960-ஆம் ஆண்டு 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முதல் படத்திற்கே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றவர் தான் கமல்ஹாசன். இதை தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான கமல், இளம் வயதை எட்டியதும் தன்னை சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்ள பல கஷ்டங்களை தாங்கியவர். கமல்ஹாசன் முன்னணி நடிகராக மாற வாய்புகுகளை ஏற்படுத்தி கொடுத்தவர் இயக்குனர் கே.பாலச்சந்தர் தான்.
ஒரு கட்டத்தில், முன்னணி நடிகராக மட்டுமின்றி இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், நடன இயக்குனர், என சினிமாவில் ஆல்ரவுண்டராக களத்தில் இறங்கி கலக்கிய கமல்... கடந்த சில வருடங்களாக 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை துவங்கி, ஒரு அரசியல்வாதியாகவும் மக்கள் சேவையில் ஈடுபட துவங்கினார். மேலும் கடந்த ஏழு வருடங்களாக விஜய் டிவியில் தொகுத்து வழங்கி வந்த, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அண்மையில் வெளியேறிய கமலஹாசன், பட வேலைகள் காரணமாக விலகுவதாக அறிவித்தார். கமல்ஹாசன். தற்போது தன்னுடைய படப்பிடிப்பில் ஒரு புறம் கலந்து கொண்டாலும், மற்றொருபுறம் அமெரிக்கா சென்று ஏ ஐ டெக்னாலஜி குறித்து படிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்னத்தால் கமலின் 'தக் லைஃப்' படத்துக்கு கூடிய மவுசு! கோடிக்கணக்கில் பிஸினஸான டிஜிட்டல் உரிமம்!
நடிகர் கமல்ஹாசனை பொறுத்தவரை... அவர் எந்த அளவுக்கு மிகவும் பிரபலமானவரோ, அதே அளவுக்கு அவருடைய வாழ்க்கையில் சர்ச்சைகளும் நிறைந்துள்ளன. இளம் நடிகராக இருக்கும் போதே பிரபல நடிகை ஸ்ரீவித்யாவை காதலித்து வந்த கமலஹாசன், பின்னர் அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஸ்ரீவித்யாவை விட்டு விலகிய நிலையில், பிரபல பரதநாட்டிய கலைஞர் வாணி கணபதியை 1978 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். கமலஹாசன் - வாணி கணபதி இருவரும் 1988-ஆம் ஆண்டு, சரியாக பத்து வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். வாணி கணபதி கமல்ஹாசனை விட்டு பிரிய முக்கிய காரணம், நடிகை சரிகா உடன் கமல் வைத்திருந்த தொடர்பு தான். வாணியை விவாகரத்து செய்து பிரிந்த அதே ஆண்டு நடிகை சரிகாவை கமலஹாசன் கரம் பிடித்தார்.
கமலஹாசன் இரண்டாவது திருமணம் நடைபெறும் போது, சரிகா நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். சரிகா - கமல்ஹாசனுக்கு ஸ்ருதி, அக்ஷரா ஆகியோர் பிறந்த பின்னர், இரண்டாவது மனையிடம் இருந்து 2004 ஆம் கமல் விவாகரத்து பெற்று பிரிந்தார். பின்னர் கமல்ஹாசனுடன் 'தேவர்மகன்' படத்தில் நடித்த போதே காதல் சர்ச்சையில் சிக்கிய நடிகை கௌதமி, கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு உறுதுணையாக இருந்த கமலஹாசன், 2005 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கௌதமியுடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தார்.
சமந்தாவின் அண்ணனுக்கு வெளிநாட்டில் நடந்த திருமணம்! வைரலாகும் குடும்ப புகைப்படம்!
இதைத்தொடர்ந்து நடிகை கௌதமி தன்னுடைய மகளின் எதிர்காலம் கருதி கமல்ஹாசனிடம் இருந்து பிரிவதாக அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். தற்போது கமல்ஹாசன் மற்றும் கௌதமி இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும், இவர்கள் பற்றிய தகவல் ஏதேனும் வெளியானால் அந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படுகிது.
அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன், நடிகை கௌதமி கேன்சர் சிகிச்சையில் இருக்கும்போது.. அவருக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாகவும், தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இவர் இயக்கி - தயாரித்து நடித்த 'விருமாண்டி' படத்தில், இடம்பெற்ற பாடல் ஒன்றை எழுதி இருந்தார் என்பது உங்களுக்கு தெரியுமா. 'உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல' என்கிற பாடலை தான் கௌதமிக்காக கமலஹாசன் எழுதினாராம். மேலும் இந்த பாடலை, எந்த உணர்வில் எழுதினாரோ... அதே உணர்வோடு பாடகி... ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாடியிருந்தார். இந்த பாடல் தற்போது வரை ரசிகர்கள் அதிகம் கேட்கும், ரொமான்டிக் மெலடி பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
அதேபோல் இந்த பாடலில் சாட்சி சொல்ல 'சந்திரன் வருவான் டி' என்கிற வரி... தன்னுடைய அண்ணன் சந்திரஹாசனை மனதில் வைத்து எழுதப்பட்டது என்பதை கமல் தன்னுடைய பழைய பேட்டி ஒன்றில் கூறி இருப்பார். இந்த படம் 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த திரைப்படம் ஆகும். கமல்ஹாசன், கதாநாயகனாக நடித்திருந்த இந்த படத்தில், அபிராமி ஹீரோயினாக நடித்திருந்தார். பசுபதி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 10 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சுமார் 40 கோடி வரை வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திற்கு 10 ரூபாய் சம்பளம்! இரண்டே வருடத்தில்... லட்சங்களில் சம்பளம் வாங்கிய கமல் பட நாயகி?