அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பொங்கல் விருந்து.! குட் பேட் அக்லி படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம்.!

Published : Jan 08, 2026, 02:18 PM IST

தளபதி விஜய்யின் 'ஜனநாயகம்' பட ரிலீஸ் தள்ளிப்போனதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில், அஜித் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக, அவரது மாஸ் ஹிட் படமான 'குட் பேட் அக்லி' தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பாகிறது.

PREV
15
அட்டகாசம்.! அதிரடி.! கொண்டட்டம்.!

திரையுலகில் ஒருபுறம் ஏமாற்றம், மறுபுறம் அதிரடி கொண்டாட்டம் என கோலிவுட் வட்டாரமே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்த பொங்கல் பண்டிகை அஜித் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத கொண்டாட்டமாக மாறப்போகிறது!

25
காத்திருக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களாக விளங்கும் விஜய் - அஜித் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தற்போதைய சூழலில், தளபதி விஜய்யின் கடைசி படமாக எதிர்பார்க்கப்படும் 'ஜனநாயகன்' திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். முன்பதிவிலேயே 65 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், தணிக்கை சான்றிதழ் தாமதத்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது விஜய் ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

35
அஜித் ரசிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

விஜய் பட ரிலீஸ் தள்ளிப்போன வருத்தத்தில் சினிமா ரசிகர்கள் இருந்த நிலையில், அவர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியாகி திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்திய அஜித்தின் மாஸ் ஹிட் திரைப்படமான 'குட் பேட் அக்லி' இந்த பொங்கலுக்கு உங்கள் வீட்டு வரவேற்பறைக்கே வரப்போகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்ட இப்படம், பொங்கல் விருந்தாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

45
நேரம் குறித்துக் கொள்ளுங்கள்!

இந்த பொங்கல் கொண்டாட்டத்தின் சிறப்பம்சமாக, சன் தொலைக்காட்சியில் வரும் ஜனவரி 15-ம் தேதி மாலை 6.30 மணிக்கு 'குட் பேட் அக்லி' உலகளாவிய தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பாக உள்ளது.

55
இது ஒரு பொன்னான வாய்ப்பு

திரையரங்கில் இப்படத்தைக் காணத் தவறியவர்களும், மீண்டும் அஜித்தின் மேஜிக்கைப் பார்க்கக் காத்திருப்பவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு. வரும் பொங்கல் திருநாளில், கரும்போடும் பொங்கலோடும் அஜித்தின் அதிரடி ஆக்ஷனை குடும்பத்துடன் கண்டு மகிழுங்கள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories