பொங்கல் வெளியீட்டிற்கு சற்று முன்பு சென்சார் போர்டு சான்றிதழ் மறுத்ததால், விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
நீண்ட நாள் காத்திருப்புக்குப் பிறகு, விஜய்யின் சினிமா வாழ்க்கையின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. ஜனவரி 9-ம் தேதி பொங்கல் வெளியீடாக படம் திரைக்கு வரவிருந்த நிலையில், சென்சார் வாரியம் படத்திற்கு தடை விதித்தது. இதனால் சர்ச்சைகளும், தமிழக அரசியல் மோதல்களும் வெடித்தன. சென்சார் வாரியத்தின் பிடிவாதத்தால் சான்றிதழ் கிடைக்காததால், 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தனது படத்திற்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் வரும் என்று விஜய் ஆடியோ லாஞ்சில் பேசியது தற்போது கவனம் பெற்றுள்ளன.
24
அன்றே கணித்தார் தளபதி
'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில்தான் விஜய் இதனை பேசி இருந்தார். தயாரிப்பாளரிடம் கேட்ட விஷயத்தை விஜய் கூறினார். "நான் அவரிடம் (தயாரிப்பாளர்) கேட்ட ஒரே விஷயம் இதுதான். சும்மாவே என் படத்துக்கு பிரச்சனை வரும். இதில் நான் வேறு பாதையில் (அரசியல்) செல்லப் பார்க்கிறேன். இந்த நேரத்தில் படம் தயாரிக்க வேண்டுமா? பிரச்சனை இல்லையா? என்று கேட்டேன். அதையெல்லாம் அவர் யோசிக்கவில்லை. நாம் படம் பண்ணலாம் என்று கூறினார். எங்களுக்கு ஒரு பாசிட்டிவ் வைப் கொடுத்தார். இந்த நேரத்தில் என் படத்தை தயாரித்ததற்கு மிக்க நன்றி" என்று விஜய் பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
34
ரசிகர்கள் ஏமாற்றம்
சென்சார் சான்றிதழ் கிடைக்காது என்பது உறுதியானதும், 'ஜனநாயகன்' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து, விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். "நெஞ்சு வெடிக்குது" என்று குறிப்பிட்டு பலரும் பதிவுகளையும், கமெண்ட்களையும் பகிர்ந்து வருகின்றனர். 'ஜனநாயகன்' எப்போது வெளியானாலும் அதற்காக நாங்கள் காத்திருப்போம் என்றும் அவர்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டு வருகின்றனர். விஜய்க்கு பயந்துதான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்பவர்களும் ஏராளம்.
இதற்கிடையில், சென்சார் சான்றிதழ் தொடர்பான மனு மீது நாளை தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்ப்பு சாதகமாக வருமா இல்லையா என்பதை அனைவரும் உற்று நோக்கியுள்ளனர். ஒருவேளை தீர்ப்பு சாதகமாக வந்தால் ஜனவரி 10ந் தேதியே ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் தீர்ப்பு சாதகமாக வராவிட்டால் இம்மாத இறுதிக்கு ஜனநாயகன் திரைப்படம் தள்ளிவைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எது நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.